Asianet News TamilAsianet News Tamil

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்.. உலக அளவில் முடங்கிய X தளம் - என்ன ஆச்சு? தவிக்கும் யூசர்ஸ்!

Twitter Down Globally : முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த X தளமானது உலக அளவில் முடங்கியுள்ளது அதன் யூசர்களை கடும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

famous Social Media platform x formerly known as twitter down for global users ans
Author
First Published Dec 21, 2023, 11:47 AM IST

இந்தியா மாற்றும் அமெரிக்கா உள்பட உலக அளவில் பல்லாயிரம் மக்கள் தங்கள் X (ட்விட்டர்) தளத்தை பயன்படுத்தமுடியவில்லை என்ற புகாரை முன்வைத்துள்ளனர். அதாவது கடந்த 24 மணிநேரத்தில் உலக அளவில் பல்லாயிரம் மக்கள் தங்கள் பிரச்சனை குறித்து புகார் அளித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

X தளத்தை பொறுத்தவரை அவ்வப்போது சில அப்டேட் காரணமாக சில பிரச்சனைகளை எழுதுவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை X தளம் முழுமையாகதடைபட்டுள்ளது . அதிலும் குறிப்பிட்டாக உலக அளவில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். வழக்கமான அளவை விட அதிக இடங்களில் X தளம் முடங்கியுள்ளது. 

முன்னேற்றப் பாதையில் இந்தியா பயணிக்கப்போகிறது.. மக்களின் ஆசைகள் மாறி வருகின்றது - பிரதமர் நரேந்திர மோடி!

ட்விட்டர் டைம் லைன், இணையம் மற்றும் மொபைல் வெர்சன் என்று இரண்டிலும் புதுப்பிப்பதை நிறுத்திவிட்டது. பயனர்கள் ட்விட்டரை அணுக முடியும் அதே நேரத்தில், அவர்களால் எந்த பதிவையும் பார்க்கமுடியவில்லை. மேலும் தேடுதல் முறையும் முழுமையாக முடங்கியுள்ளது என்றே கூறலாம். அங்கீகரிக்கப்பட்ட பக்கங்களையும் பார்வையிட முடியவில்லை. 

ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.. டெல்லி மெட்ரோ அறிவிப்பு..

இன்று வியாழக்கிழமை காலை சுமார் 10.30 மணிக்கு மேல் ட்விட்டர் செயலிழந்தது என்று கூறப்படுகிறது. 
இந்த பிரச்சனை உலகளாவியது மற்றும் இந்திய பயனர்களுக்கு மட்டும் அல்ல இது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்வீட்களின் தெரிவுநிலையை மட்டுமே இந்தச் சிக்கல் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. ஏனென்றால், சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில், #TwitterDown என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. எனவே, பயனர்கள் ட்வீட்களை உருவாக்கலாம் மற்றும் இடுகையிடலாம் ஆனால் அந்த ட்வீட்கள் தற்போது யாருக்கும் தெரிவதில்லை என்பது தான் உண்மை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios