Active X : இளையோர் & முதியோர் இடையே நற்பிணைப்பை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசு!
இளைய தலைமுறையினர் மற்றும் மூத்தோர் இடையே நல்ல பிணைப்பை ஊக்குவிக்கும் ActiveX விளையாட்டு நிகழ்ச்சி சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
முதியவர்கள் துடிப்பாக மூப்படைவதற்கும், இளையோர்கள் அவர்களை புரிந்து கொண்டு நடந்துகொள்வதற்கும் ஏற்ற பிணைப்பை ஊக்குவிக்கவும் ActiveX எனும் விளையாட்டு நிகழ்ச்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பும், அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் இணைந்து ActiveX விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதில், பல்வேறு வகையான ஊக்க நடவடிக்கைகள், விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதில் 1,700க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
கால்பந்து, பெரிய ரப்பர் பந்து போன்ற விளையாட்டு போட்டிகளும், விளையாட்டுகளும் அதில் இடம்பெற்றன. மூத்த குடிமக்கள் துடிப்பான வாழ்க்கையைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இளையர்களுடனான நல்ல பிணைப்பை வலுப்படுத்தவும் இந்த ActiveX விளையாட்டு நிகழ்ச்சி வழிவகை செய்கிறது.
நாட்டின் கொடியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம்.. சிங்கப்பூர் அரசு புது ரூல்ஸ் - மீறினால் தண்டனை உறுதி!
வரும் நாட்களில், இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் ActiveX திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் தசை செயல்பாடு இழப்பு போன்ற வயது தொடர்பான நோய்களுக்கும் இந்த ActiveX திட்டத்தில் மருத்துவப் பரிசோதனையையும் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயே குழந்தைகள் மீது வெந்நீரைக் கொட்டிய கொடுமை! சிங்கப்பூர் பெண்ணின் கொடூரச் செயல்!