சீனாவில் மனித உருவம் கொண்ட மீன் வலம் வந்து கொண்டிருக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த மீனின் வீடியோவை, சுற்றுலா பயணி ஒருவர் வெளியிட, இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டுள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ளது கன்மிங் நகரம். இந்த பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகள் மற்றும் இயற்கை அழகை, பார்க்க பல சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பயணிகள், இங்கு உள்ள விலங்குகளையும், பறவைகளையும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும் தங்களுடைய செல் போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.

இந்நிலையில் அங்கு அமைந்துள்ள, நீர் நிலை ஒன்றை,   சுற்றுலா பயணியாக வந்த ஒருவர் தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மனித உருவம் கொண்ட மீன் ஒன்று அவருடைய கண்ணில் தென்பட்டுள்ளது. மற்ற மீன்களை போல் இல்லாமல் சற்று வித்யாசமாக உள்ளதை அறிந்து, அந்த மீனை வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டினார்.

அந்த மீனும் தலையை உயர்த்தி அவரை பார்த்து, அவரை நோக்கி வந்துள்ளது. இந்த மீனிற்கு இரண்டு கண்கள், மூக்கு, வாய், என அச்சு அசல் மனிதனின் முகத்தோடு ஒத்துப்போகும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியான அவர் இதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.