சொந்த வீட்டை விட்டு சொகுசு பங்களாவில் வாடகைக்கு குடியேறிய அமைச்சர்! சிங்கப்பூர் அமைச்சரவையில் விளக்கம்!
சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கா. சண்முகம், 26 ரிடவுட் ரோடு வீட்டை வாடகைக்கு எடுத்தது குறித்து அதன் நாடாளுமன்ற அவையில் விளக்கம் அளித்தார்.
உள்துறை அமைச்சர் சண்முகம் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர், ரிடவுட் சாலையில் இரண்டு பழமையான பங்களாக்களை வாடகைக்கு எடுத்தது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் கென்னத் ஜெயரெட்ன தொடர்ச்சியாக ஆன்லைன் கட்டுரைகளைத் எழுதி வந்தார்.
அமைச்சர்கள் சொத்துக்களுக்கு "நியாயமான சந்தை மதிப்பை விட குறைவாக செலுத்துகிறார்களா? என்று ஜெயரெட்னம் தனது கட்டுரைகளில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் லீ சியென் லூங் கடந்த மே 23 அன்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹீன் தலைமையில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், ரிடவுட் வீட்டை வாடகைக்கு எடுத்தது குறித்து அமைச்சர் சண்முகம், நாடாளுமன்ற அவையில் விளக்கம் அளித்தார். அப்போது, எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
ரிடவுட் ரோடு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு முன்னதாக, தமது சொந்த வீட்டை விற்க முடிவு செய்ததாக அமைச்சர் கூறினார். 2016-ம் ஆண்டில் தான் 60 வயதை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் தமது நிதி நிலை குறித்து மறுஆய்வு செய்ததாக குறிப்பிட்டார். அதில், தமது சேமிப்பின் பெரும்பகுதி சொந்த வீட்டில் முடங்கிக் கிடப்பதை உணர்ந்ததாக அமைச்சர் கூறினார்.
அமைச்சராவதற்கு முன் தான் வழக்கறிஞராக இருந்தபோது கிடைத்த வருமானத்தில் வாங்கிய அந்த வீட்டை, தனியார் துறையின் மூலம் தாம் சம்பாதித்தது தமது எதிர்கால வருமானமாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் அந்த வீட்டை வாங்கியதாக அமைச்சர் கூறினார்.
கடலின் நடுவே மீன் பண்ணைகளை அமைக்கும் சிங்கப்பூர் அரசின் டெண்டர் காலவரையின்றி ஒத்திவைப்பு!
ஆனால், அமைச்சரான பின்னர் தனது வருமானம் மாறியதார், ஒரே சொத்தில் இவ்வளவு சேமிப்பை வைத்திருப்பது சரியல்ல என்று ஆலோசனை கூறப்பட்டது என்றார். அதனால் தனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்ததாக சண்முகம் தெரிவித்தார்.
பொதுவாகவே, பழமைவாய்த வீடுகள் தமக்கு பிடிக்கும் என தெரிவித்த அமைச்சர் சண்முகம், 26 ரிடவுட் ரோடு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு முன், அதே போன்ற பல பழமையான வீடுகளை பார்த்ததாகவும் கூறினார்.
அப்போது, அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை என்ன என்பது தமக்குத் தெரியாது என்பதை நாடாளுமன்ற அவையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார். அருகில் அமைந்துள்ள வீடுகளின் வாடகையை அடிப்படையாகக் கொண்டு, எவ்வளவு வாடகை செலுத்தவேண்டும் என்பதைக் கணிக்குமாறு தமது முகவரிடம் கூறியதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தொடங்கும், உலகளாவிய தோல் மருத்துவ மாநாடு! 11000 பேர் பங்கேற்பு!
சொந்த வீட்டை விற்க முடிவு செய்துகொண்டிருந்த வேளையில் அந்த வீட்டை வாடகைக்கு விட்டதாகவும் அமைச்சர் சண்முகம் நாடாளுமன்ற அவையில் கூறினார்.
சிங்கப்பூரில் ஆண் நண்பருக்கு பாலியல் வன்கொடுமை: 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!