93 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து கொன்ற சைகோ...!! நிர்வாணப் படம் வரைந்த திகில் பின்னணி...!!
கொலைகள் மூலம் பலருக்கு இந்த பூமியில் இருந்து விடுதலை பெற்று கொடுத்ததாகவும், கூறி போலீசாரை திகிலூட்டிய அவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைகளையும் தத்ரூபமாக விவரித்து, போலீசாரை வியக்க வைத்தார் சாமுவேல். அமெரிக்காவில் மிகக் கொடூரமான கிரைம் நாவல்களில் வரும் கொடூர கொலைகாரன்களை விஞ்சும் அளவிற்கு சாமுவேலின் கொலைகள்
அமெரிக்காவில் அழகிய பெண்களை ஓவியமாக தீட்டும் நபர், கடந்த 50 ஆண்டுகளில் 93 பெண்களை சித்திரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியின் வாக்குமூலம் விசாரணை நடத்தும் போலீசாரையே கதிகலங்க வைத்திருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் அதிக அளவில் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அந்த வழக்குகளில் துப்பு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன. ஆனாலும் அமெரிக்க போலீசார் விசாரணை தொடர்ந்து நடத்தி வந்தனர், கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று இளம் பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 79 வயதான சாமுவேல் லிட்டில் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையில் திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. அந்த நபர் தன்னுடைய பாலியல் இச்சைக்காக இதுவரை 93 பெண்களை கொலை செய்ததை போலீஸாரிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் போலீசாரை தூக்கி வாரிப் போடவைத்துள்ளது.
தான் சிறு வயது முதல் நன்கு ஓவியம் வரையக் கூடியவன் என்பதால் தன் பதின் பருவத்தில் இருந்தே பெண்களை நிர்வாணமாக, ஓவியம் வரைவதில் ஈடுபாடு இருந்ததாகக் கூறியவர் தன்னிடம் படம் வரைய வரும் பெண்களை நிர்வாணமாக படம் வரைவது உடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்து பின் அவர்களை கொலை செய்ததாகவும் பகீர் தகவல் தெரிவித்துள்ளார். தன்னால் அமெரிக்காவில் 19 மாகாணங்களிலும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என மொத்தம் தொன்னுத்தி மூன்று பேரை கொலை செய்ததாகவும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார் சாமுவேல்.
தான் செய்த கொலைகள் மூலம் பலருக்கு இந்த பூமியில் இருந்து விடுதலை பெற்று கொடுத்ததாகவும், கூறி போலீசாரை திகிலூட்டிய அவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைகளையும் தத்ரூபமாக விவரித்து, போலீசாரை வியக்க வைத்தார் சாமுவேல். அமெரிக்காவில் மிகக் கொடூரமான கிரைம் நாவல்களில் வரும் கொடூர கொலைகாரன்களை விஞ்சும் அளவிற்கு சாமுவேலின் கொலைகள் இருந்துள்ளது என்றும். இதுவரை இத்தனை கொலைகளை தனிநபர் ஒருவர் செய்திருப்பது அமெரிக்காவில் இதுவே முதல்முறை என்று சொல்லும் அளவிற்கு லிட்டில் சாமுவேலின் கொலைகள் கருதப்படுகிறது. ஆனாலும் அவர் செய்த கொலைகளுக்கான ஆதாரம் திரட்டுவது போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.