முதன்முறையாக கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க சௌதி பெண்களுக்கு அனுமதி - அடுத்தடுத்து சீர்திருத்தங்களால் அசத்தும் அரசு...

Saudi women allowed to participate in soccer tournaments for the first time - successive government
Saudi women allowed to participate in soccer tournaments for the first time - successive government


சௌதி அரேபியாவில் முதன்முறையாக பெண்கள் கால் பந்தாட்டப் போட்டிகளில் பார்வையாளர்களாக பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையில் சௌதியில் காட்டப்படும் பாகுபாடுகளை கலைவதன் ஒரு அங்கமாக தீவிர பழமைவாத சௌதியில் பெண்களுக்கு இருந்த இந்த தடை விலக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமின் சுன்னி பிரிவின் வஹாபி வழக்கங்களை சௌதி அரச குடும்பமும், மத நிறுவனங்களும் பின்பற்றி வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
 
சௌதி அரசின் சட்டங்களின்படி, "வேலைக்குச் செல்லும் பெண்களும், பயணம் மேற்கொள்ளும் பெண்களும் கட்டாயம் ஆண் துணை இல்லாமல் வெளியே வரக்கூடாது.

உணவு விடுதிகளில்கூட ஆண்கள் அமர்வதற்கு மற்றும் குடும்பத்துடன் வருபவர்களுக்கு என இரண்டு பிரிவுகளே இருக்கும். குடும்பத்தின் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் தனியாக வர அங்கு அனுமதியில்லை என்பதற்காகவே அந்த வடிவமைப்பு".

ஆண்கள் அனுமதி இல்லாமல் சௌதி பெண்களால் செய்ய முடியாத இன்னும் பல விடயங்கள் உள்ளன. அவை, "கடவுசீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிப்பது, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது, வங்கிக் கணக்கு திறப்பது, திருமணம் செய்துகொள்வது, தொழில்களை தொடங்குவது, அவசர சிகிச்சை அல்லாத அறுவை சிகிச்சை செய்வது, சிறையை விட்டு வெளியேறுவது உள்ளிட்டவற்றை பெண்கள் செய்ய குடும்ப ஆண்களின் அனுமதி அவர்களுக்கு கட்டாயம் தேவை.

இப்படி பல்வேறு விதிமுறைகள் பெண்கள் சுதந்திரத்தை பறிக்கும் பட்சத்தில் இருக்கும் இந்த நாட்டில், தற்போது மேற்கொள்ளப்பட்டுவ ரும் சீர்திருத்தங்கள், அந்நாட்டின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் சௌதியை ஒரு மிதவாத நாடாக மாற்றும் முயற்சிகளின் ஓர் அங்கமாகும்.

அதில், முதல் சீர்திருத்தம், "சௌதி பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விலக்கப்பட்டது, அதன்படி, வரும் ஜூன் மாதம் முதல் பெண்களும் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மற்றொன்று, பல ஆண்டுகளாக அங்கு திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்டது. இதற்கு மத குருக்கள் மற்றும் பழமைவாதிகளிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது

இந்த  தருணத்தில் தற்போது மற்றுமொரு சீர்திருத்தத்தை அந்நாடு கொண்டுவந்துள்ளது. அது என்னவெனில், "பெண்களும் கால் பந்தாட்டப் போட்டிகளில் பார்வையாளர்களாக பங்கேற்கலாம்" என்பதே. .

"பெண்களை விளையாட்டு மைதானங்களில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள்" எனும் பொருள்படும் ஹேஷ்டேக் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது.

அதன்படி, ஜெட்டா நகரில் நேற்று நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டியைக் காண பெண்கள் குடும்பத்தினருடன் அதிகளவில் வந்திருந்தனர்.

பெண்கள் அதிக அளவில் வருவதை ஊக்குவிக்க அவர்களது கலாச்சார உடையை தங்கள் அணி வீர்கள் அணியும் சீருடையின் நிறத்தில் சில கால்பந்து மன்றங்கள் கொடுத்து வரவேற்றன.

கால்பந்து போட்டி நடந்த இடத்தில், பெண் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக கார் விற்பனையகம் ஒன்றும் திறக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios