சவுதி அரேபியாவுக்கு பெரும்பகுதி வருவாய், கச்சா எண்ணெய் மூலமாகத்தான் கிடைக்கிறது. இதன் மொத்த ஏற்றுமதி வருவாயில், கச்சா எண்ணெயின் பங்களிப்பு 75%. இந்நிலையில் சவூதி 5, 10, 30 ஆண்டு முதிர்வு காலத்துக்கான கச்சா எண்ணெய் சார்ந்த பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர். இது தொடர்பாக லண்டன், நியூயார்க்கில் முதலீட்டாளர் கூட்டம் நடத்த இருக்கிறது. தற்போது சுமார் 26,650 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. இது இன்னும் சுமார் 70 வருடங்களுக்குத்தான் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

எண்ணெய் வளத்தால் மட்டுமே பெரும் பகுதி வருவாய் ஈட்டிவரும் சவூதி அரேபியா பொருளாதாரத்துக்கு, இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் இன்னும் 70 ஆண்டுகளில் மாற்று எரிபொருள் உருவாகலாம் என்பதால், கச்சா எண்ணெய் தேவையும் இதை சார்ந்துள்ள பிற நாடுகளில் சரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.