ஏமன் நாட்டில், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 140 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏமன் அதிபர் மன்சூதி ஹைதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகவும், அதிபருக்கு ஆதரவாகவும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் சனாவில் முன்னணி போராளியின் உறவினர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமானோர் திரண்டனர். அப்போது சவுதி தலைமையிலான கூட்டுப் படையினர் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 534 பேர் படுகாயம் அடைந் ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.