'Samsung Galaxy Note7' ரக செல்போன்கள் திடீரென தீப்பிடித்து எரிவதாக ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, அவற்றை விமானத்தில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், 'Samsung Galaxy Note7' என்ற பெயரில் புதிய செல்ஃபோனை வெளியிட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த ஃபோன்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டன.
இந்த செல்ஃபோன்கள் திடீரென தீப்பிடித்து எரிவதாக தகவல் பரவியதையடுத்து, விமானங்களில் இந்த செல்ஃபோன்களை எடுத்து செல்ல பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.

இந்நிலையில், இத்தகைய செல்ஃபோன்களை, விமானங்களிலோ அல்லது பயணிகளின் லக்கேஜ்களிலோ எடுத்து செல்லக்கூடாது என்று அமெரிக்காவும் தடைவிதித்துள்ளது.
இதற்கிடையே, தொடர் புகார்களை தொடர்ந்து 'Samsung Galaxy Note7' செல்ஃபோன்கள் உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
