Putin losing eyesight : தீவிர சிகிச்சையில் புதின்.. இன்னும் 3 ஆண்டு தான் உயிரோடு இருப்பார்.! அதிர்ச்சி தகவல்
Putin losing eyesight : உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உக்ரைன் போர்
ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதின் அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மேற்கத்திய நாடுகளின் நிலைமை மேலும் சீர்குலையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோய் காரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி 'தி இன்டிபென்டன்ட்' என்ற அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி தான் தற்போது எல்லா இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
புதின் - உளவுத்துறை தகவல்
இதுதொடர்பாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் UK-வில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கர்பிச்கோவ் என்பவருக்கு அனுப்பிய செய்தியில், 'வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் காரணமாக புடின் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். அந்த வகையில் அவர் தலைவலியால் அவதிப்படுகிறார்.அவர் தொலைக்காட்சியில் தோன்றும்போது, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் படிக்க,பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட காகிதத் துண்டுகள் தேவை. அவை மிகவும் பெரியவை ஆகும். ஒவ்வொரு பக்கமும் ஒன்றிரண்டு வாக்கியங்களை மட்டுமே வைத்திருக்க முடியும்.
அவரது பார்வை தீவிரமாக மோசமாகி வருகிறது' என்று அதில் இடம்பெற்றிருக்கிறது. ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில்,தற்போது அவர் 3 ஆண்டுகள் மட்டுமே வாழ கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறும் ஊகங்களை மறுத்துள்ளார். மேலும், புடினுக்கு எந்த நோயையும் சுட்டிக்காட்டும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் செர்ஜி கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சென்னைக்கு அதிரடி மாற்றம்.! என்ன காரணம் தெரியுமா ?
இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?