Periyar University : தொலைதூர கல்வி வழியாக அதிக அளவில் வருமானம் கிடைப்பதாகவும்,  பணம் கொடுத்தால் தொலைதூர கல்வியில் தேர்ச்சியும் , சான்றிதழ் பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டதன்  காரணமாகவும் இதற்கு பல்கலைகழக மானியக்குழு அனுமதி மறுத்துவிட்டது. 

யுஜிசி அறிவிப்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகம் முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் , தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் 27 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தொலைதூர படிப்பை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை . தொலைதூர கல்வி வழியாக அதிக அளவில் வருமானம் கிடைப்பதாகவும், பணம் கொடுத்தால் தொலைதூர கல்வியில் தேர்ச்சியும் , சான்றிதழ் பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டதன் காரணமாகவும் இதற்கு பல்கலைகழக மானியக்குழு அனுமதி மறுத்துவிட்டது. 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் மூன்று படிப்புகள், சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் 30 படிப்புகள், தமிழ் பல்கலைக்கழகத்தின் 15 படிப்புகள், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை கழகத்தால் நடத்தப்படும் 82 படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, இந்த அனுமதியை மீறி மற்ற பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியில் மாணவர்களை சேர்க்க நடத்தினால் கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் பெற்ற சான்றிதழ் செல்லாது என்றும் ஏற்கனவே எச்சரித்தது.

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு விடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்து உள்ளது.

இதையும் படிங்க : அவர் சேகர்பாபு இல்ல "ஸ்நேக் பாபு. !" அமைச்சர் சேகர்பாபுவை பங்கம் செய்த எச்.ராஜா !

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !