அவர் சேகர்பாபு இல்ல "ஸ்நேக் பாபு. !" அமைச்சர் சேகர்பாபுவை பங்கம் செய்த எச்.ராஜா !
H Raja : மாரிதாஸ், கிஷோர் கே. சாமி, கல்யாணராமன் வரிசையில் கார்த்திக் கோபிநாத் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக காவல்துறை இரண்டு மாதத்தில் 5 லாக்கப் டெத் நடத்திய கொலைகாரர்கள் கார்த்திக் கோபிநாத்தை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
கார்த்திக் கோபிநாத் கைது
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, கார்த்திக் கோபிநாத் இணையம் மூலம் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளார். கடவுள் பெயர் சொல்லி ரூ50 லட்சம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பேரில், கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்கள், வலது சாரி சிந்தனையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, '9 மாதங்களாக கோவிலை சரி செய்யாமல் இருந்தது அறநிலையத்துறை அதிகாரிகள் செய்த தவறு.
எச்.ராஜா - அமைச்சர் சேகர்பாபு
அதை செய்யாமல் இருந்ததால்தான் பொதுமக்கள் கையில் எடுத்தார்கள். தவறு என்றால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியதுதான். கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணம் எந்த பயன்பாட்டுக்காக வசூல் செய்தாரோ அந்த பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.கோவிலை புனரமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. அப்படி இருக்கும் போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மாரிதாஸ், கிஷோர் கே. சாமி, கல்யாணராமன் வரிசையில் கார்த்திக் கோபிநாத் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக காவல்துறை இரண்டு மாதத்தில் 5 லாக்கப் டெத் நடத்திய கொலைகாரர்கள் கார்த்திக் கோபிநாத்தை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு ஸ்நேக் பாபுவாக திகழ்கின்றார். அதனால் மக்கள் போராட்டத்தின் மூலம் அறநிலையத் துறையில் இருந்து இந்து கோயில்கள் மீட்பதை தவிர இந்துக்களுக்கு வேறு வழி இல்லை’ என்று கூறினார்.
இதையும் படிங்க : Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !
இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !