Asianet News TamilAsianet News Tamil

ரஷ்யா உக்ரைன் போர்: 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடும் உக்ரைன் ராணுவ வீரர்கள்.. வைரல் வீடியோ..

உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Russia Ukraine war: Ukrainian soldiers dancing to 'naatu naatu' song.. Viral video..
Author
First Published Jun 2, 2023, 3:44 PM IST

RRR படம் வெளியாகி ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சர்வதேச அளவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த பாடல், போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கும் வந்துவிட்டது.  உக்ரேனிய ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலை பாடி, நடனமாடுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு-நாடு' படம் உக்ரைனில் படமாக்கப்பட்டது. உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான மரின்ஸ்கி அரண்மனையில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2021 இல், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த பாடல் படமாக்கப்பட்டது.

இதையும் படிங்க : உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்! இதுதான் முக்கிய காரணம்..

 

RRR படம் மார்ச் 2022 இல் விளம்பரப்படுத்தப்பட்டபோது, ​​அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, உக்ரைனில் பாடலின் படப்பிடிப்பை நினைவு கூர்ந்தார். ரஷ்ய-உக்ரைன் போர் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ சில முக்கிய காட்சிக படமாக்குவதற்காக அங்கு சென்றிருந்தோம். படப்பிடிப்பில் இருந்தபோது, தற்போது போராக மாறியுள்ள பிரச்னைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, திரும்பி வந்து பார்த்த பிறகுதான் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது.” என்று கூறியிருந்தார்.

அதே போல் நடிகர் ராம் சரண், பாடல் காட்சியை படமாக்க ஆதரவளித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் “ உக்ரைன் ஜனாதிபதி மாளிகையில் நாங்கள் நாட்டு நாட்டு பாடலை படமாக்கினோம். உக்ரைன் அதிபரும் ஒரு கலைஞராக இருந்ததால், அவர் மிகவும் கருணையுடன் இருந்தார், அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கினார். நாங்கள் 17 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தோம்," என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் தடுக்கி விழுந்த அதிபர் ஜோ பிடன்!

Follow Us:
Download App:
  • android
  • ios