அடி தூள்... உலகில் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா அறிவித்தது..!! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரஷ்யர்கள்..!!

இதனால் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி உருவாக்கிய நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. முதல் கொரோனா தடுப்பூசி மருந்து முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Russia announces world's first corona vaccine Russians in a flood of happiness

முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின்  வெளியிட்டுள்ளார். முதல் தடுப்பூசியை தனது மகளுக்கு செலுத்தி சரி பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிர் கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரமாக இறங்கியது. ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள இத்தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அது முழு தடுப்பூசியாக உருவெடுத்துள்ளது. 

Russia announces world's first corona vaccine Russians in a flood of happiness

இதனால் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி உருவாக்கிய நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. முதல் கொரோனா தடுப்பூசி மருந்து முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 10,12 ஆகிய தேதிகளுக்குள் தடுப்பூசி பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதேபோன்ற தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தடுப்பூசிக்கு ரஷ்யா ஒழுங்குமுறை அமைப்பிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. தாங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே ரஷ்யா சுட்டிக்காட்டியது, இந்நிலையில் தனது  தடுப்பூசி ஆராய்ச்சியில் முழுவதுமாக வெற்றி பெற்று, முதல் தடவையாக உருவாகியுள்ள தடுப்பூசி குறித்து  அதிகாரப்பூர்வமாக அதிபர் விளாடிமிர் புடின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் கொரோனாவுக்கு பாதுகாப்பான தடுப்பூசி தயாரித்துள்ளோம். மேலும் எங்கள் நாட்டிலேயே அதை பதிவு செய்துள்ளோம். எனது இரண்டு மகன்களில் ஒருவருக்கு நான் தடுப்பூசி பயன்படுத்தினேன், அதன்பிறகு அவள் நன்றாக இருக்கிறாள். காம்-கோவிட்- வெக் லியோ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின்படி ரஷ்யா சுகாதார அமைச்சகம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முன்னணி மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு, வழங்கப்படும்எனவும் கூறப்பட்டுள்ளது. 

Russia announces world's first corona vaccine Russians in a flood of happiness

ஒரு மாதத்திற்கு முன்பு ரஷ்யா, தங்களது தடுப்பூசி ஆராய்ச்சி முன்னணியில் இருப்பதாகவும், ஆகஸ்ட் 10 முதல் 12 ஆம் தேதிக்குள் புதிய தடுப்பூசி பதிவு செய்யப்படும் என்றும், சுட்டிக்காட்டியிருந்தது. அதேநேரத்தில் ரஷ்யாவை அமெரிக்காவும், பிரிட்டனும் குறைகூறின. அதாவது தங்கள் நாட்டிலிருந்து தடுப்பூசி தயாரிப்பு சூத்திரத்தை திருட ரஷ்யா முயன்றது எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். உலகின் இந்த முதல் தடுப்பூசி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் அக்டோபருக்குள் இது மக்களை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை 10 மணியளவில்,  உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்த விரிவான தகவல்களை வழங்குமாறு, சுகாதாரத்துறை அமைச்சர்  மிகைல் முராஷ்கோவிடம் கேட்டுக் கொண்டார். 

Russia announces world's first corona vaccine Russians in a flood of happiness

அப்போது முராஷ்கோ கூறுகையில், உலகிலேயே எங்கள் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நல்ல திறம்பட செயல்படுகிறது. நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், இதற்கு தேவையான அனைத்து சோதனைகளும் முடிந்துவிட்டது என கூறியுள்ளார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி தடுப்பூசி பரிசோதனை முடிவுக்கு வந்துள்ளன. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி இந்த தடுப்பூசிக்கு இருப்பதற்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளன. அதேபோல் எதிர்மறையான பக்க விளைவுகள் இதில் இல்லை. கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் 100% வெற்றிகரமாக இருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.  சோதனை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர்கள், வைரஸுக்கு எதிராக முறையாக நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios