Asianet News TamilAsianet News Tamil

Rishi Sunak pm: ‘ டீடோட்லர்’ரிஷி சுனக்! அறிந்திராத சில ஸ்வரஸ்யத் தகவல்கள்

பிரிட்டன் பிரதமராக முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் குறித்த சில ஸ்வாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Rishi Sunak: some fascinating facts about Rishi Sunak
Author
First Published Oct 25, 2022, 3:43 PM IST

பிரிட்டன் பிரதமராக முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் குறித்த சில ஸ்வாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மட்டுமே இந்தியர் அல்ல. அவரின் பெற்றோர் பிரிக்கப்படாத இந்தியாவில், தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனைக் காப்பாற்றுவாரா? ரிஷி சுனக்கிற்கு காத்திருக்கும் 9 சவால்கள் என்ன?

Rishi Sunak: some fascinating facts about Rishi Sunak

ஆதலால், ரிஷி சுனக் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டும் பெருமை அல்ல பாகிஸ்தானுக்கும் சேர்த்துதான்.
பிரிட்டனில் உள்ள சவுத்தாம்டனில் இந்திய பெற்றோருக்கு 1980ம் ஆண்டு ரிஷி சுனக் பிறந்தார். இவரின் தாத்தா பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் குஜ்ரன்வாலா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

நெஹ்ராவோடு ஒப்பீடு! கோஹினூர் வைரத்தை மீட்டுக்கொடுங்கள் ரிஷி சுனக்!நெட்டிசன்கள் மீம்ஸ்

  • பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலாவில் பஞ்சாபி காத்ரி குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுனக். சுனக் என்பது பஞ்சாபியில் ஒருவகை பிரிவினர். ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸ் சுனக், கடந்த 1935ம் ஆண்டு குஜ்ரன்வாலாவில் இருந்து கணக்கராக கென்யாவுக்கு குடி பெயர்ந்தார். 
  • ராம்தாஸ் சுனக்கின் மனைவி சுஹக் ராணி சுனக் குஜ்ரன்வாலாவில் இருந்து டெல்லி்க்கும் அதன்பின் அங்கிருந்து கென்யாவுக்கும் சென்றார். கென்யாவிலிருந்து பிரிட்டனில் ரிஷி சுனக்கின் தாத்தா குடியேறினார். 

Rishi Sunak: some fascinating facts about Rishi Sunak

  • ரிஷி சுனக் தந்தை யாஷ்விர் மருத்துவர், தாய் உஷா சுனக் மருந்தாளுநர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற வின்செஸ்டர் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ரிஷி சுனக் படித்தார். கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தில் 3 ஆண்டுகள் ரிஷி சுனக் பணியாற்றினார். கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஐ. பட்டமும் ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
  • இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை 2009ம் ஆண்டு ரிஷி சுனக் திருமணம் செய்தார். இவர்களுக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.
  • பிரிட்டனின் கோடீஸ்வரர், சமூக ஆர்வலர் டிசிஐ பன்ட் மேன்ஜ்மென்ட் நிர்வாகி கிரிஸ் ஹானிடம் ரிஷி சுனிக் பணியாற்றினார். 
  • 2015ம் ஆண்டு, யார்க்சையர் மாகாணத்தின் ரிச்மாண்ட் தொகுதியிலிருந்து எம்.பியாக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவி ஏற்கும் போது ரிஷி சுனக், பகவத் கீதை புனித நூலின் மீது சத்யப்பிரமாணம் எடுத்தார்.
  • 2020ம் ஆண்டு பிரிட்டனின் நிதிஅமைச்சராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார்.
  • பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்ஸன் ஆட்சியில் நிதிஅமைச்சராக இருந்த ரிஷி சுனக், டவுனிங் தெருவில் உள்ள தனது இல்லத்தில் தீபாவளி நேரத்தில் விளக்குகளை ஏற்றி கொண்டாடினார்
  • ரிஷி சுனக்கிற்கு புகைபிடித்தல், மதுகுடித்தல் உள்ளிட்ட எந்தவிதமான கெட்டபழக்கமும் இல்லாதவர். ஸ்டார்வார்ஸ் ரசிகரான சுனக், ஜெடி நைட்போல் வளர்ந்தவர்
  • ரிஷி சுனக் அடிக்கடி குடும்பத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், உயர்ந்த மதிப்புகளைப் பற்றி பேசக்கூடியவர்.
  • பிரிட்டனில் கொரோனா காலத்தில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டபோது, அனைத்து மக்களும் பாதிக்கக்கூடாத வகையில் சிறப்பு நிதித்திட்டத்தை, மினிபட்ஜெட்டையும் தயாரி்த்து வழங்கி மக்களின் பாராட்டுகளை ரிஷி சுனக் பெற்றார்.
  • ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு 70 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங். யார்க்சையரில் சொந்த வீடு, கென்சிங்டனில் தனது மனைவி அக்சதாவுக்கு தனியாக வீடு உள்ளது.
  • பிரிட்டன் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிட முடிவு செய்தபோது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆடம்பரமாக வாழக்கூடியவர், அதிகமாக செலவு செய்யக்கூடியவர், விலை உயர்ந்த ஆடைகள், ஷூ அணிபவர் ரிஷி சுனக் என்று விமர்சிக்கப்பட்டது
  • பிரிட்டனில் கடந்த 200 ஆண்டுகளில் 42 வயதில், இளம் வயதில் பிரதமராகவது இதுதான் முதல்முறையாகும்.
  • பிரிட்டனில் இதுவரை பிரதமராக இருந்தவர்களில் முதல்முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவதும் இதுதான் முதல்முறையாகும்.
Follow Us:
Download App:
  • android
  • ios