இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவின் தோற்றத்தோடு ரிஷி சுனக்கை ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிஸன்கள், கோஹினூர் வைரத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவின் தோற்றத்தோடு ரிஷி சுனக்கை ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிஸன்கள், கோஹினூர் வைரத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்க உள்ளார். பிரிட்டினின் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர உள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் இளம் வயதில் பிரிட்டனின் பிரதமராக வருபவரும் ரிஷி சுனக்தான்.
ரிஷி சுனக் கடந்து வந்த அரசியல் பாதை! பிரிட்டன் எம்.பி. முதல் பிரதமர் வரை!

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்பதையடுத்து, அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ராவும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறும்புபிடித்த நெட்டிசன்கள் சிலர் ஆஷிஸ் நெஹ்ராவின் தோற்றத்தைப் போல ரிஷி சுனக் இருப்பதால் இருவரின் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து மீம்ஸ் உருவாக்கி, கிண்டலடித்து வருகிறார்கள்.
பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்; பிரதமர் மோடி வாழ்த்து!
நெஹ்ராவின் சகோதரரே என்று ரிஷி சுனக்கை கிண்டலடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் வருவதால், கோஹினூர் வைரத்தை மீட்கும் கோரிக்கையும் வலுத்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில் “ அபாரம் ஆஷிஸ் நெஹ்ரா, பிரிட்டனின் அடுத்த பிரதமராக வரப்போகிறீர்கள். ஐடியை வீட்டுக்கு கொண்டுவாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் நெஹ்ராவின் புகைப்படத்தை பதிவிட்டு, “ கோஹினூர்வைரத்தை இந்தியாவுக்கு எப்படி கொண்டுவரலாம் என ரிஷி சுனக் யோசித்த தருணம்” எனக் கிண்டலடித்துள்ளார்.
பிரதமர் மோடியும், ரிஷி சுனக்கும் பேசுவது போன்ற புகைப்படத்தை ஒருவர் பதிவிட்டு, இருவரும் பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை எவ்வாறு மீட்டு வருவது என ஆலோசிக்கும் காட்சி எனப் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் ராணி எலிசபெத் மணிமகுடத்தில் கோஹினூர் வைரம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் எடுத்துச் செல்லப்பட்ட விலை மதிப்பில்லாத அந்த கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவருவது நீண்டகாலக் கோரிக்கையும். தற்போது பிரிட்டன் ராணி எலிசபெத் காலமாகிவிட்டதையடுத்து, அந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!!
பிரிட்டன் ராணியின் மணி மகுடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரம் 108 காரட், 21.6 கிராம் எடை கொண்டதாகும். ஆந்திரம் மாநிலம், குண்டூர் அருகே உள்ள கொல்லூர் வைர சுரங்கத்திலிருந்து இந்த கோகினூர் வைரம் எடுக்கப்பட்டது. 108 காரட் மதிப்பு கொண்ட இந்த கோகினூர் வைரத்தை மகாராஜா துலீப் சிங் ராணி விக்டோரியாவுக்கு பரிசாக வழங்கினார்.
ராணி எலிசபெத் கட்டுப்பாட்டில்தான் கடந்த 70 ஆண்டுகளாக இருந்தது. பிரிட்டன் வசம் இருக்கும் கோகினூர் வைரம், உண்மையில் இந்தியாவுக்கான சொத்தாகும். இந்த வைரத்தை மீட்டு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது
