பிரிட்டனின் புதிய பிரதமரான ரிஷி சுனக் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். 

பிரிட்டனின் புதிய பிரதமரான ரிஷி சுனக் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். கடந்த அக்.20ம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க, மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். இதையடுத்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்தபின், ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றார்.

இதையும் படிங்க: தவறுகளை திருத்துவதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளேன்; மூன்றாம் மன்னர் சார்லசை சந்தித்த பின்னர் ரிஷி சுனக் பேட்டி!

பதவியேற்ற பின் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக ஆலோசித்த நிலையில் முன்னாள் பிரதம் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இருந்த பலரையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். பின்னர் புதிய அமைச்சர்களை நியமித்தார். அதன்படி, தலைமை கொறடாவாக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டார். மேலும் டிரஸ் அமைச்சரவையும் தற்போதைய ரிஷி சுனக் அமைச்சரவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.126 கோடி ஈவுத்தொகை ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி

பதவி

டிரஸ் அமைச்சரவை

 ரிஷி சுனக் அமைச்சரவை

துணைப் பிரதமர்

பிராண்டன் லூயிஸ்

பிராண்டன் லூயிஸ்

கருவூலத்தலைவர்

ஜெரமி ஹன்ட்

ஜெரமி ஹன்ட்

உள்துறை அமைச்சர்

கிராண்ட் ஷாப்ஸ்

சுயெல்லா பிரேவர்மேன்

வெளியுறவுத்துறை அமைச்சர்

ஜேம்ஸ் கிளவர்லி

ஜேம்ஸ் கிளவர்லி

பாதுகாப்புத்துறை அமைச்சர்

பென் வாலஸ்

பென் வாலஸ்

வர்த்தகம் 
மற்றும் 
எரிசக்தி 
அமைச்சர்

ஜேக்கப் ரீஸ்-மோக் 

கிராண்ட் ஷாப்ஸ்

நாடாளுமன்றத் 
தலைவர் 

பென்னி மோர்டான்ட் 

பென்னி மோர்டான்ட் 

கல்வித்துறை 
அமைச்சர் 

கிட் மால்ட்ஹவுஸ் 

கில்லியன் கீகன்