Number 13: விமானங்களில் 13-ம் நம்பர் சீட் ஏன் இல்லை? அந்த எண் அவ்வளவு துரதிர்ஷ்டமானதா?
Why is There No Row 13 on Planes: விமானத்தில் பயணம் செய்யும்போது சீட் நம்பரை கவனித்திருக்கிறீர்களா? 12-க்கு அப்புறம் நேராக 14-வது எண் தான் இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? 13-ம் எண்ணை ஏன் தவிர்க்கிறார்கள்? என இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

Why is There No Row 13 on Planes
அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்கள், 12-வது சீட் நம்பருக்குப் பிறகு நேரடியாக 14-வது சீட் நம்பர் வருவதைக் கவனித்திருப்பார்கள். இதற்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிலர் இதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும், பலர் 13-ம் எண்ணை ஒரு கெட்ட சகுனமாகவே பார்க்கிறார்கள். விமானங்களில் ஏன் 13-ம் எண் வரிசை இல்லை என்பதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
'த்ரைஸ்கைடோஃபோபியா'
உலகில் பல பகுதிகளில் 13-ம் எண்ணைப் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் 13-ம் எண்ணை துரதிர்ஷ்டவசமானதாகக் கருதுகிறார்கள். மனநல மருத்துவத்தில் 13-ஆம் எண்ணைக் கண்டு பயப்படுவதற்கு 'ட்ரைஸ்கைடோஃபோபியா' (Triskaidekaphobia) என்று பெயர். இந்த எண் மேற்கத்திய நாடுகளில் துரதிஷ்ட எண்ணாக கருதப்படுகிறது விமான பயணங்கள் ஏற்கனவே பலருக்கும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துபவை என்பதால், 13ஆவது இருக்கையில் அமர்ந்து பயணிப்பது பயணிகளின் பயத்தை இன்னும் அதிகமாக்கி விடக்கூடாது என்பதற்காக விமான நிறுவனங்கள் இந்த எண்ணை தவிர்க்கின்றன.
இதையும் படியுங்கள்: Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
மத காரணம்
13 ஆம் எண்ணை தவிர்ப்பதற்குப் பின்னால் சில மத காரணங்களும் உள்ளன. இதன் வேர்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் உள்ளன. இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட கடைசி விருந்தான 'தி லாஸ்ட் சப்பர்' நிகழ்வில் 13-வதாகக் கலந்துகொண்ட ஜூதாஸ் என்ற நபர்தான் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இதனால் 'Friday the 13th' மற்றும் 13 என்ற எண் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக மாறியது.
இதையும் படியுங்கள்: Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!
வியாபார தந்திரம்
விமானப் பயணம் பலருக்கும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தும். தரையிறங்கும் வரை ஒருவித பயத்துடனே இருப்பார்கள். இந்த நிலையில், 13-ம் எண் மீது எத்தனை பயணிகளுக்கு பயம் இருக்கும் என்று தெரியாது. அதனால், அந்த எண்ணை நீக்கிவிட்டால் யாருக்கும் பயம் இருக்காது என விமான நிறுவனங்கள் முடிவு செய்தன. ஒருவேளை 13-ம் எண் சீட் கொடுத்தாலும், சிலர் அதில் உட்கார மறுக்கலாம். அப்போது அந்த வரிசையை காலியாக விட வேண்டியிருக்கும். இதற்குப் பதிலாக அந்த வரிசையையே நீக்கிவிடுவது நல்லது என விமான நிறுவனங்கள் முடிவெடுத்தன.
இதையும் படியுங்கள்: Train: ரயில் என்ஜின் கண்ணாடியில் ஏன் இரும்பு வலை பொருத்துகிறார்கள் தெரியுமா? பொருளு சிறுசு ஆனா பண்ற வேலை பெருசு.!
17 ஆம் எண்ணை துரதிர்ஷடமாக கருதும் நாடுகள்
13-ம் எண் மட்டுமல்ல, இத்தாலி மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் மக்கள் 17-ம் எண்ணையும் துரதிர்ஷ்டவசமானதாகக் கருதுகின்றனர். ஏனென்றால், ரோமன் எழுத்துக்களில் 17 என்ற எண்ணுக்கு லத்தீன் மொழியில் ‘நான் என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டேன்’ என்று அர்த்தம். இது மரணத்தைக் குறிப்பதாக நினைப்பதால், அந்த எண்ணையும் அவர்கள் துரதிர்ஷ்டவசமானதாகப் பார்க்கிறார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

