ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், அந்நாட்டு ஜனாதிபதியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கிடையே அறிவித்தார். இதற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், ‘’காஷ்மீர் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தப்பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம். 

இதையும் படிங்க:- காங்கிரஸா..? பாஜகவா?னு திமுக பேதம் பார்த்ததில்லை.. போதும் நிறுத்துங்கள் மோடி... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

இந்திய எல்லை கட்டுப்பாட்டை தாண்டி பொதுமக்களை தாக்கியதை வன்மையாக கண்டிகின்றேன். அத்தோடு மனிதாபிபானம் மீறப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்து இப்பிரச்சிணைகளுக்கு தீர்வு காண சரியான நேரம் இது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அந்த மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறானது என பாகிஸ்தான் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் அவசரமாக கூடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையில் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் விரும்பினால் மத்திய்ஸ்தம் செய்து வைக்க தாம் தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஓரிரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த இந்திய தரப்பு, இந்தப்பிரச்னையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். யாருடைய தலையீடும் தேவையில்லை என கூறி விட்ட நிலையில் இந்த விவகாரத்தில் ட்ரம்பை அழைத்துள்ளது பாகிஸ்தான் தரப்பு.  

இதையும் படிங்க:- சிறப்பு அந்தஸ்து 370 ரத்து... காஷ்மீரில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது தெரியுமா..?