Asianet News TamilAsianet News Tamil

சிறப்பு அந்தஸ்து 370 ரத்து... காஷ்மீரில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது தெரியுமா..?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் இனி அங்கு என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம். 
 

Do you know what is going to happen in Kashmir anymore?
Author
Kashmir, First Published Aug 5, 2019, 12:16 PM IST

சட்டப் பிரிவு 35ஏ ஜம்மு காஷ்மீர் மன்னராக இருந்த ஹரி சிங்கால் அறிமுகம் செய்யப்பட்டது. 1927-ம் ஆண்டு அமலுக்கு வந்த இந்தச் சட்டப் பிரிவின் மூலம், வெளி மாநிலத்தவர்கள் ஜம்மு- காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது என்றும் அரசு வேலைகளில் சேர முடியாது என்றும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. 370-ன் ஒரு பிரிவுதான் 35ஏ. 370 மூலம், காஷ்மிருக்கென்று தனியாக சட்ட சாசனம், கொடி, தேசிய பாதுகாப்பைத் தவிர்த்து சட்டம் இயற்றிக் கொள்ளும் உரிமை ஆகியவை கொடுக்கப்பட்டன. Do you know what is going to happen in Kashmir anymore?

பிரிவு 35ஏ மூலம், ஜம்மூ காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கும் உரிமையும் அம்மாநில அரசுக்கு உள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளக்கு மேல் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் ‘வீ தி சிட்டிசன்ஸ்' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் 35ஏ பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. Do you know what is going to happen in Kashmir anymore?

35ஏ சட்டப் பிரிவுக்கு ஆதரவாக இருப்போர், “ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை நிர்ணயிப்பதே 35ஏ சட்டப் பிரிவுதான். அதை நீக்க மாட்டோம் என்று அம்மக்களுக்கு உறுதி அளித்திருக்கிறோம். அதை நீக்கும் பட்சத்தில் அங்கிருக்கும் பிரிவினைவாதிகள், இந்தியாவுக்கு எதிராக உள்ளூர் மக்களை திசைத் திருப்ப வாய்ப்புள்ளது” என்று கூறுகின்றனர். Do you know what is going to happen in Kashmir anymore?

இந்த சிறப்பு சட்டப் பிரிவுக்கு எதிரான கொள்கையைத்தான் பாஜக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பாஜக, அங்குள்ள பிடிபி கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வந்தது. ஆனால், சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவுகளில் இரு கட்சிகளுக்கும் இருந்த வேறுபாடுதான் கூட்டணிப் பிளவுக்கு வித்திட்டது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட பாஜக-வின் அருண் ஜெட்லி, “காஷ்மீரின் சிறப்பு சட்டப் பிரிவு அவ்வளவு ஸ்திரமாக இல்லை. காரணம், அது சட்ட சாசனத்தை பின் கதவு வழியாக அடைந்தது” என்றார். Do you know what is going to happen in Kashmir anymore?

இதை மனதில் வைத்தே பாஜக அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 370வது பிரிவு ரத்தால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொறுத்தும். பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் இனி அசையா சொத்துக்களை வாங்கலாம். வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலும் இனிமேல் ஜம்மு-காஷ்மீரில் அம்மநில பெண்கள் சொத்து வாங்கலாம். 370வது பிரிவு ரத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை இனி குறைக்கலாம், கூட்டலாம். ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6லிருந்து 5 ஆண்டுகளாக மாறுகிறது.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios