பாகிஸ்தான் நாட்டின் போலான் மாவட்டத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் போலான் மாவட்டத்தில், ராவல் பிண்டியில் இருந்து குவெட்டா நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரிமோட் மூலம் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு 20 நிமிட இடைவெளியில் 2 முறை வெடிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு வெடித்ததில், ரயிலில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பலுசிஸ்தானில் உள்ள பிரிவினைவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
