ராணி எலிசபெத் உடல் நாளை நல்லடக்கம்... உலகத் தலைவர்கள் வருகையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

queen elizabeths body will be laid to rest tomorrow and security arrangements intensified

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், உடல்நலக்குறைவால் கடந்த 8 ஆம் தேதி காலமானார். பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. இதை அடுத்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் வெளிநாடுகளின் தலைவர்கள் முக்கிய பிரதிநிதிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான மக்கள் ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: இரவோடு இரவாக தங்கம் வெட்டி எடுத்த மக்கள்.. நிலச்சரிவில் மண்ணோடு புதைத்த 20 பேர்.. அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில் நாளை ராணி எலிசபெத்திற்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். அதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதையும் படிங்க: சீனாவில் 42 மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து !கரும்புகை,விண்ணை முட்டிய தீ பிளம்பு வீடியோ

அவரை இந்திய தூதரக அதிகாரிகள், இங்கிலாந்து அரசு பிரதிநிதிகள் வரவேற்றனர். பின்னர் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, லண்டனில் உள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் நாளை ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து முழுவதும் சுமார் 125 திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் திரைகளை அமைத்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. கடந்த 1997ம் ஆண்டு இறந்த இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், கடந்த 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உட்பட, சமீபத்திய இங்கிலாந்து வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தற்போது அந்த பட்டியலில் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கும் சேரவுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios