கடுமையான விலை உயர்வு.. வெடித்த மக்கள் போராட்டம்.. பதவி விலகக்கோரி அதிபர் உருவபடம் எரிப்பு..

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அனைத்து பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது.
 

Protesters blame Sri Lanka leader for severe economic crisis

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அனைத்து பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி:

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலாத்துறை  முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Protesters blame Sri Lanka leader for severe economic crisis

வரலாறு காணாத விலை உயர்வு:

கொரோனாவால் ஏற்பட்டு பொருளாதார மந்தம் காரணமாக இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் வெகுவாக குறைந்தது. இதனிடையே பணத்தின் மதிப்பு குறைந்ததால், மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக, ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க: WHO : மீண்டும் தலைதூக்கும் கொரோனா - உலக நாடுகளை எச்சரிக்கும் உலக சுகாதார மையம்!

Protesters blame Sri Lanka leader for severe economic crisis

அந்நிய செலவாணி குறைப்பு:

விலைவாசி உயர்வால் மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதில் கூட பெரும் சிரமம் அடைந்தனர். இதுமட்டுமின்றி அந்நிய செலவாணி கையிருப்பு குறைவால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. மின்சாரத்திற்கு தேவையான நிலக்கரி வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

Protesters blame Sri Lanka leader for severe economic crisis

மேலும் படிக்க:Russia Ukraine War: ஆயிரக்கணக்கான பேர் பலி..? அப்பாவி மக்கள் தஞ்சமடைந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் ..

சிலிண்டர் தட்டுப்பாடு:

இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகில் இன்று போராட்டம் நடைபெற்றது.

Protesters blame Sri Lanka leader for severe economic crisis

வெடிக்கும் போராட்டம்:

எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பத்தாயிரத்துக்கு அதிமானோர் கலந்து கொண்டு கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவின் உருவங்கள் பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க: சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது... ரஷ்யா அதிரடி அறிவிப்பு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios