Asianet News TamilAsianet News Tamil

LIVE : பிரியாவிடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத்.. இறுதி சடங்கு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு !

கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார்.

Prince Harry and Meghan Markle Relegated to Second Row at Queen Elizabeth Funeral
Author
First Published Sep 19, 2022, 7:35 PM IST

ஸ்காட்லாந்து அரண்மனையில் ஓய்வெடுத்து வந்த அவர், அங்கேயே காலமானார்.96 வயதான ராணி எலிசபெத்திற்குக் கடந்த சில மாதங்களாகவே மோசமான உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. வயது மூப்பு காரணமாக அவரால் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை என்று கூறப்பட்டது. ராணியின் மறைவு பிரிட்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு மரியாதை நிகழ்வுகளுக்கு பிறகு அவரது உடல் இன்று இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் இந்த இறுதி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஊர்தியின் மீது அவரது கிரீடமும் வைக்கப்பட்டிருந்தது.

Prince Harry and Meghan Markle Relegated to Second Row at Queen Elizabeth Funeral

மேலும் செய்திகளுக்கு..Queen Elizabeth II’s Burial Site: பிரிட்டன் ராணி எலிசபெத் துயில இருக்கும் வின்ட்சர் அரண்மனையின் ரகசியம்!!

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ், அவரது உடன்பிறப்புகள், அவரது மகன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி மற்றும் விண்ட்சர் குடும்பத்தின் பிற உறுப்பினர்களால் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு ராணியின் இறுதி ஊர்வலம் செல்லும்போது உடன் செல்வார்கள். இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும் , பிரிட்டன் ராணிக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

இந்த இறுதி ஊர்வலமானது பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகிறது. அனைவரும், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு  2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். “God Save the King” என்ற பாடல் ராணியின் இறுதி ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்டது. ராணியின் உடல் அடக்கத்திற்காக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெலிங்டன் ஆர்ச்சுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இரவு அடக்கம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

சவப்பெட்டியில் ராணியின் தனிப்பட்ட கொடி, ராணியின் கிரீடத்தில் சிலுவை பொருத்தப்படட வட்டமான உருண்டை, செங்கோல் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளது. ராணிக்கான அதிகாரமானது கடவுளிடம் இருந்து பெறப்பட்டது என்பதை அந்த உருண்டையில் உள்ள சிலுவை நினைவுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..Queen Elizabeth-II funeral:ராணி 2ம் எலிசபெத் உடல் இன்று அடக்கம்: இறுதிச்சடங்கு பற்றி அறிய வேண்டிய அம்சங்கள்

அதுமட்டுமல்ல, இளவரசர் ஹாரி, மகாரணியின் மகனான இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் மட்டும் ராணுவ உடை அல்லாமல், கறுப்பு நிறத்திலான உடையை மட்டுமே அணிந்துள்ளார்கள். அரச குடும்ப வழக்கப்படி, கருப்பு நிற உடை அணிய வேண்டும். ஆனால் ஆண்ட்ரூ மற்றும் ஹாரி ஆகியோர் ஏற்கெனவே அரசு குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அவர்களுக்கு சாதராண உடையில் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களுக்கு கருப்பு நிற உடை வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்றாம் சார்லஸ், தனது தாய்க்கு இறுதி செய்தியை  அவரது பூத உடல் அடங்கிய சவப்பெட்டி மீது வைத்து அனுப்பியுள்ளார். அதில் பூக்களால் படர்ந்த ராணியின் சவப்பெட்டி மீது மிகச் சிறிய அட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது தாய்க்கு இறுதியாக எழுதிய கடிதம் வைக்கப்பட்டுள்ளது.

அதில், ‘அன்பான மற்றும் அர்ப்பணிப்பு உள்ள நினைவுடன், சார்லஸ் ஆர்’ என்று எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார். ராணியின் பெற்றோரும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அடுத்த இறுதி சடங்கு.. சர்ச்சையில் சிக்கிய ஹாரி - மேகன் தம்பதி - அடுத்தடுத்து பரபரப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios