இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளாதல் அவர்  வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 550-க்கும் அதிகமானோர் ஆளாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸூக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த வைரஸூக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அதிவேகமாக செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் இதற்கு முறையான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும் 5,700க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 281-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு (71) கொரோனா உள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.