அபுதாபியில் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு.. அவர் பயணத்தின் நோக்கம் என்ன? முழு விவரம்!

PM Modi In Abu Dhabi : பாரத பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று அபுதாபி நாட்டிற்கு சென்றுள்ளர். அங்கு அவர் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

Prime Minister Modi welcomed with military honors in Abu Dhabi What is the purpose of his visit ans

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார், அங்கு அவருக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது வளைகுடா நாட்டிற்கு பிரதமர் மோடியின் ஏழாவது பயணமாகும். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
 
பிரதமர் மோடியின் முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரின் அழைப்பின் பேரில், நாளை பிப்ரவரி 14ஆம் தேதி துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உலகத் தலைவர்களுடன் உரையாற்றுகிறார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க விஷயமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள முதல் இந்து கோவிலான BAPS இந்து கோவிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

 

அமீரகத்தில் பிரதமர் மோடி.. வரலாறு காணாத வரவேற்பு - "அஹ்லான் மோடி" நிகழ்விற்கு 65,000க்கும் மேற்பட்டோர் பதிவு!

கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் அபுதாபி பயணத்தின் போது, ​​உள்ளூர் நாணய செட்டில்மென்ட், பேமெண்ட் மற்றும் மெசேஜிங் சிஸ்டம்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் புதுமையான சுகாதாரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-23ல் சுமார் 85 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்துடன் இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தகப் பங்காளிகளாக உள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல 2022-23ல் அன்னிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் நான்கு முதலீட்டாளர்களில் ஐக்கிய அரபு அமீரகமும் இருக்கின்றது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து, அவர் கத்தாருக்குச் செல்கிறார், அங்கு அவர் பிப்ரவரி 15 வரை தங்குவார். தமீம் அவர்களை சந்திக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், அவரின் தலைமையில் கத்தார் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது" என்று பிரதமர் மோடி அவர்கள் தனது சமூக ஊடகங்களிலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபியில் முதல் இந்து கோவிலை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios