விடுதலை புலிகள் தலைவார் பிரபாகரன் படம் இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மனதை விட்டு இன்னும் பிரபாகரன் மறையாமல் வாழ்கிறார் எனபதையே இது காட்டுகிறது.
இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்திலுள்ள பாக்கிளேஸ் என்ற தனியார் வங்கியில், நீங்கள் அக்கவுண்ட் வைத்திருந்தால் உங்களுக்கு அளிக்கும் டெபிட் கார்டில் விரும்பிய புகைப்படத்தைக் கொடுத்து உங்கள் ஏ.டி.எம் கார்டில் பிரிண்ட் செய்ய முடியும்.
அந்த வகையில் அங்குள்ள பலரும் அதிகம் டெபிட் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைத்தான் அதிகம் பதிவு செய்துள்ளார்களாம்.

இதுகுறித்து அங்குள்ள தமிழர் பத்திரிக்கை ஒன்றில் , இலங்கை தமிழர்களின் வீரத்தின் விதையாகவும் வீழ்ந்து விடாத லட்சிய நெருப்பாகவும் எம்மை வழி நடத்தும் தேசியத்தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த தமிழர்களின் பெருமையையினையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலங்கள் கடந்தாலும் உலக தமிழர்களின் இதயத்தில் பிரபாகரன் இன்னும் வாழ்கிறார் எனபதையே இந்நிகழ்வு எடுத்து காட்டுகின்றது.
