எவ்வளவு கத்தியும் யாருக்கும் கேட்கவில்லை.. லிப்டுக்குள் ஏற்பட்ட கொடூரம் - 6 வயது மகளை தவிக்கவிட்டு சென்ற தாய்!

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பணி நிமித்தமாக வெளிய சென்றபோது எதிர்பாராத சம்பவ ஒன்று அரங்கேறியுள்ளது, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Postwomen who was in duty stuck in a lift for three days later police found her dead inside lift

தபால்காரரான ஓல்கா லியோன்டிவா, கடந்த ஜூலை 24ம்  தேதி வளக்கம்போல தனது பணிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு கட்டிடத்தின் லிப்ட்டில் அவர் எறியுள்ளார், 9 மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அவர் சென்றபோது லிப்ட் பழுதாகியுள்ளது. லிப்ட்டை திறக்கமுடியாமல் உள்ளேயே முடங்கிய அந்த பெண், சுமார் மூன்று நாட்கள் அந்த லிப்ட்டுக்குள் சிக்கிய பரிதாபமாக இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 24-ம் தேதி வேலை முடிந்து அவர் வீடு திரும்பாததால் அவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சுமார் மூன்று நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு 32 வயதான அந்த பெண்ணின் உடல் இறுதியாக லிப்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர், சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த லிப்ட் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அது வேலை செய்யும் (Working Condition) நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று மின்வெட்டு ஏதும் ஏற்படவில்லை என்பதை அந்த பகுதி மின்சார விநியோக நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

சிங்கப்பூர் to பினாங்.. சொகுசு கப்பலில் சுற்றுலா.. நடுக்கடலில் மாயமான இந்திய பெண்மணி - தவிக்கும் குடும்பம்!

இதேபோன்ற சம்பவம் கடந்த வாரம் இத்தாலியின் பலேர்மோவில் நடந்தது குறிப்பிடத்தக்கது, அங்கு பிரான்செஸ்கா மார்ச்சியோன் என்ற 61 வயது பெண்மணி, மின்வெட்டின் போது லிப்டில் சிக்கி இறந்து கிடந்தார். கடந்த ஜூலை 26ம் தேதி மின்தடை ஏற்பட்டு அவர் லிப்ட்டில் சிக்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் உடனடியாக அழைக்கப்பட்டன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வருவதற்குள் அந்த பெண்மணி இறந்துவிட்டார். 

இந்நிலையில் இந்த இரு விபத்துகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் முழு முயற்சியையும் எடுத்து வருகின்றனர். உஸ்பெகிஸ்தான் நாட்டில் 3 நாள் லிப்ட்டில் சிக்கி இறந்த அந்த 32 வயது பெண்ணுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். தன் தாயோடு தனியே வாழ்ந்து வந்த அவர், தற்போது தனது உறவினர்களுடன் உள்ளார். 

எலான் மஸ்க் வைத்த கண்கூச வைக்கும் X விளக்கு... கடுப்பாகி ஆப்பு வைத்த அமெரிக்க மக்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios