Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூர் MASன் நிர்வாக இயக்குநர் ரவி மேனன்.. அரசியலில் இறங்கப்போகிறாரா? - பல நாள் கேள்விக்கு கிடைத்த பதில்!

Singapore News : சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) நிர்வாக இயக்குநரும் சிங்கப்பூரின் மிக நீண்ட காலம் மத்திய வங்கித் தலைவருமான ரவி மேனன் அரசியலுக்குள் நுழைவாரா? மாட்டாரா? என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

political entry managing director of Monetary Authority of Singapore Ravi Menon Opens Up ans
Author
First Published Nov 2, 2023, 12:01 PM IST | Last Updated Nov 2, 2023, 12:01 PM IST

இந்நிலையில் கடந்த அக்டோபர் 27 அன்று பிரபல சிங்கப்பூர் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ​​மத்திய வங்கியாளராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் அரசியல்வாதியாக இருக்க மாட்டார் என்று கேள்வி கேட்ட நிருபரிடம் அவர் தெளிவாக கூறியுள்ளார். சிங்கப்பூர் அரசியலில் ஏற்கனவே பல இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடைபெறும் இந்த 2023ம் ஆண்டின் இறுதியில் அவர் MASயில் இருந்து பதவி விலகும்போது, அரசியல் பதவிக்கு போட்டியிடுவது குறித்து யோசிப்பீர்களா என்று நேர்காணல் செய்பவரால் கேள்விகேட்கப்பட்டது, ரவி மேனன் தனது மனம் திறந்த பதிலை அளித்துள்ளார். 

காசாவில் அரங்கேறும் கொடூரம்.. இது போர் குற்றமாக கருதப்படும்..? இஸ்ரேலின் போக்கு குறித்து ஐ.நா அளித்த தகவல்!

அவரது முன்னோர்கள் சிலர் சென்ற பாதையில் இருந்து இது ஒரு வெளியேற்றம் என்றும் அவர் கூறினார். துணைப் பிரதம மந்திரி ஹெங் ஸ்வீ கீட், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் மற்றும் மறைந்த ரிச்சர்ட் ஹூ ஆகியோர் மத்திய வங்கியில் பணியாற்றிய பிறகு நிதியமைச்சர்களாக ஆனார்கள் என்பது குறிப்பிடதக்கது. மேலும் மேனன் தனது ஓய்வூ கால திட்டங்களைப் பற்றியும் பேசினார்.

புதுமை மற்றும் தொழில்நுட்பம், சமூக உள்ளடக்கம், காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. ஆகவே என் ஓய்வு காலத்தில் அந்த பகுதிகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் என்று கூறினார். சிங்கப்பூரில் சமீபத்திய S$2.8 பில்லியன் பணமோசடி வழக்கு மற்றும் அது நாட்டின் நற்பெயரை எவ்வாறு பாதித்தது என்பது உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்து மேனன் பேசினார்.

இளம் ஆசிரியையை தப்பா போட்டோ எடுத்த ஆசிரியர்.. கையும் களவுமாக பிடித்த மாணவன் - சாருக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

அவர் மேலும் கூறுகையில் : “100 சதவீதம் தூய்மையான நிதி மையம் என்று எதுவும் இல்லை, அதனால் அது தரமாக இருக்க முடியாது. ஆனால் உண்மையில் அழுக்கைத் தேடி அதை தீர்க்கமாக துடைப்பது யார்? நாங்கள் இதை நன்றாக செய்துள்ளோம் என்று நினைக்கிறேன்" என்று அவர் பெருமிதத்தோடு கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios