இங்கிலாந்து மன்னர் மற்றும் அவரது மனைவி மீது முட்டை வீச்சு… மர்ம நபரை மடக்கிபிடித்து கைது செய்த போலீஸ்!!
இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்றபோது, மூன்றாம் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டைகளை வீசிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
தனது தாய் ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் அரியணைக்கு வந்த சார்லஸ், வடக்கு இங்கிலாந்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்றபோது, மூன்றாம் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா மீது முட்டைகளை வீசிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கமலா ஹாரிஸ் மட்டுமா.! அமெரிக்க இடைத்தேர்தலில் அசத்திய இந்தியர்கள் !! யார் யார் தெரியுமா ?
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவும் மிக்லேகேட் பார் வழியாக யோர்க் நகரின் வழியாக நடந்து சென்றனர். அப்போது, மன்னர் மற்றும் அவரது மனைவி மீது மர்ம நபர் ஒருவர் முட்டை வீசியுள்ளார். இதுக்குறித்த வீடியோவும் வெளியானது. அதில், மன்னரும் அவரது மனைவியும் யோர்க் நகருக்குள் நுழையும் போது அவர்களை நோக்கி மூட்டை வீசப்படுவதை காணலாம்.
இதையும் படிங்க: பேஸ்புக் ஊழியர்கள் 11,000 பேர் பணிநீக்கம்... மெட்டா நிறுவனம் அதிரடி!!
மேலும் மன்னரின் வருகைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக வேலிகளுக்குப் பின்னால் பல அதிகாரிகள் ஒரு மனிதனை தடுத்து நிறுத்துவதைக் காணலாம். இதை அடுத்து அங்கிருந்த போலீஸார் மன்னரையும் அவரது மனைவியையும் பத்திரமாக அங்கிருந்து கூட்டி சென்றனர். மேலும் முட்டையை வீசிய அந்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.