கமலா ஹாரிஸ் மட்டுமா.! அமெரிக்க இடைத்தேர்தலில் அசத்திய இந்தியர்கள் !! யார் யார் தெரியுமா ?

ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி,ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் உட்பட நான்கு அமெரிக்க வாழ் இந்திய அரசியல்வாதிகள் புதன்கிழமை அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் மாநில ஆளுநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

4 Indian-Americans politicians elected to US House and many others in Midterm elections

இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், அரசியல்வாதியுமான ஸ்ரீ தானேதர், குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்ஸை வீழ்த்தி, மிச்சிகனில் வெற்றி பெற்ற முதல் இந்திய அமெரிக்கராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவருக்கு வயது 67 ஆகும். இல்லினாய்ஸ் மாவட்டத்தில் இருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி, இவருக்கு வயது 49, தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4 Indian-Americans politicians elected to US House and many others in Midterm elections

சிலிக்கான் வேலியில் இருந்து இந்திய-அமெரிக்கரான ரோ கன்னா, இவருக்கு வயது 46, தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் பிரதிநிதிகள் சபைக்கு ஒரே ஒரு இந்திய-அமெரிக்க பெண் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ரோ கண்ணா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகியோர் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க..மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

இந்திய-அமெரிக்க அரசியல்வாதிகளில் மூத்தவரான அமி பெரா, இவருக்கு 57, கலிபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால், இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்திய-அமெரிக்க வேட்பாளர்கள் ஆளுநர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் அருணா மில்லர். இவருக்கு வயது 58. 

4 Indian-Americans politicians elected to US House and many others in Midterm elections

இவர் மேரிலேண்டில் இருந்து ஆளுநராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.  வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், இந்திய-அமெரிக்கரான சந்தீப் ஸ்ரீவஸ்தவா, டெக்சாஸில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.  அமெரிக்காவின் 33.19 கோடி மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் என்றாலும், தேர்தலில் அதிக அளவில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை பறித்துள்ளனர்.

இதையும் படிங்க..தேர்வில் காப்பி.! கண்டித்த ஆசிரியர்.! 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் !

இதையும் படிங்க..நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios