பேஸ்புக் ஊழியர்கள் 11,000 பேர் பணிநீக்கம்... மெட்டா நிறுவனம் அதிரடி!!

மெட்டா நிறுவத்தில் பணிபுரிந்து வந்த 11,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

meta fired eleven thousand employees and its the biggest layoff

மெட்டா நிறுவத்தில் பணிபுரிந்து வந்த 11,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்மையில் டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதிரடியாக அதன் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். அதில் இந்தியாவை சேர்ந்த ஊழியர்களும் அடங்குவர். இந்த நிலையில் அதே செயலை தற்போது பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் செய்துள்ளது.

இதையும் படிங்க: பேஸ்புக் மெட்டா நிறுவனம் ‘மெகா ஆட்குறைப்பை’ இன்று தொடங்குகிறது

மெட்டா நிறுவனத்தில் சுமார் 87,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் அதன் சி.இ.ஓ.வான மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த 6 மாதத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததோடு முழு ஈடுபாடு உடன் பணிகளைச் செய்யாவிட்டால் வேலையிழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி தற்போது மெட்டா நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

முதற்கட்டமாக மெட்டா நிறுவத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 11,000 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும் செலவை குறைக்கும் விதமாகவும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டாவின் 18 ஆண்டு வரலாற்றில், இத்தனை ஊழியர்களை பணிநீக்கம் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios