Shinzo Abe: japan:ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பிரதமர் கிஷிடாவுடன் சந்திப்பு
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் சென்றார். அங்கு அந்நாட்டின் பிரதமர் புமியா கிஷாடாவைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் சென்றார். அங்கு அந்நாட்டின் பிரதமர் புமியா கிஷாடாவைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.
ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே கடந்த ஜூலை 8ம் தேதி, அங்கு நரா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பிரச்சாரக் கூட்டத்தில் இருந்த யமகாமி என்பவர் அபேவை சுட்டுக் கொலை செய்தார். உலகளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த ஜூலை 12ம் தேதி டோக்கியோவில் அபேயின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்து, உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அபேயின் நினைவு நிகழ்ச்சியை இன்று(செவ்வாய்கிழமை) நடத்த ஜப்பான் அரசு முடிவு செய்தது.
துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த மர்ம மனிதன்.. 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி - கொடூர சம்பவம் !
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உலகத் தலைவர்களுக்கு ஜப்பான் அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள், 20 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்த நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அதிகாலை ஜப்பான் புறப்பட்டுச் சென்று ஜப்பான் சென்றடைந்தார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பக்சி ட்விட்டரில் பதிவிட்டகருத்தில் “ டோக்கியோவுக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்துவிட்டார்.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கஉள்ளார். அதுமட்டுமல்லாமல், பிரதமர் கிஷிடாவைச் சந்தித்து பிரதமர் மோடி பேசஉள்ளார். இருதலைவர்களும் சந்திப்பது இரு நாடுகளின் உறவுகளை வலிமையாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை பிரதமர் மோடி இன்று டோக்கியோ நகரில் சந்தித்துப் பேசினார். கடந்த மே மாதம் குவாட் மாநாட்டில் சந்தித்துப் பேசி பின்,தற்போது 2வதுமுறையாக ஜப்பான் பிரதமர் கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்தார்
பூமியில் வாழும் எறும்புகள் எண்ணிக்கை தெரியுமா? பறவை, விலங்குகள் எடையைவிட அதிகமாம்!
இருதலைவர்களின் சந்திப்புக் குறித்து வெளியுறவுச் செயலாளர் வினய் வத்ரா கூறுகையில் “ பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆகியோரிடையான சந்திப்பு இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும், ராஜாங்கரீதியான உறவுகளை மேலும் பலப்படுத்தும். கொரோனாவுக்குப்பின் ஜப்பான்-இந்தியா உறவுகள் வலுப்பெற இரு தலைவர்களும் உறுதிஎடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்
ஜப்பான் பிரதமர் கிஷிடாவிடம் பிரதமர் மோடி கூறுகையில் “ அபே என்னுடைய சிறந்த நண்பர் அவரை இழந்துவிட்டேன். இருவரும் சோகமான நிகழ்வில் சந்திக்கிறோம். கடந்த முறை ஜப்பானுக்கு நான் வந்திருந்தபோது, அபேயை சந்தித்து நீண்டநேரம் பேசினேன். அபேயே இந்தியா இழந்து வருந்துகிறது, ஜப்பானும் அவரை இழந்து தவிக்கிறது. இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை அபே உயரமான இடத்துக்கு கொண்டு சென்றார், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் கூட்டாக செயல்பட்டன.
உலகளவில் இரு நாடுகளும் சிறப்பாக பங்களிப்புசெய்ய எங்கள் நட்பு முக்கியமாக இருந்தது. அபே செய்த நற்பணிகளை எப்போதும் இந்தியா நினைத்திருக்கும். இருப்பினும் உங்கள் தலைமையை இந்தியா நம்புகிறது. இந்தியா-ஜப்பான் உறவுகள் புதிய உச்சத்துக்குச் சென்று, உலகின் பல்வேறுசிக்கல்களைத் தீர்க்க இரு நாடுகளும் உதவும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் கிஷிடோ நன்றி தெரிவித்தார்.