உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் மோடி கட்டளை!!
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்று இருக்கிறார். இந்தியா, ரஷ்யா உறவை புதுப்பிக்கும் வகையில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் குறித்து அதிபர் விளாடிமிர் புடினுடன் மோடி பேச இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கு இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்தியாவும், ரஷ்யாவும் எப்போதும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. வர்த்தகம், அரசியல், பொருளாதாரம் என்று இருநாடுகளும் தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றுள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகில் இருக்கும் அதிபர் விளாடிமிர் புடின் வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது உற்சாக முகத்துடன் மோடியை வரவேற்ற புடின் அதே இடத்தில் தேநீரும் வழங்கினார். அங்கேயே இருவரும் தங்களுக்குள் நட்பை பரிமாறிக் கொண்டனர். மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் மோடிக்கு புடின் வாழ்த்து தெரிவித்தார். தனது வாழ்த்தில், ''உங்களது கடின உழைப்பு, ஈடுபாடு, உற்சாகம், உங்களது சொந்தக் கருத்துக்கள் ஆகியவற்றால் மூன்றாவது முறையாக ஆட்சி செய்வதற்கு உங்களை மக்கள் தேர்வு செய்து இருக்கின்றனர். உலகில் இன்று மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது'' என்றார்.
ஏலியன்களுடன் தொடர்பு முதல் உலக அழிவு வரை.. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..
இதற்கு பதில் அளித்துப் பேசிய பிரதமர் மோடி, ''உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாங்கள் ஆட்சி அமைத்து இருக்கிறோம். இதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு அமைத்து இருந்தார். தாய் நாட்டிற்கு சேவை செய்வதற்காக மக்கள் எனக்கு இந்த சந்தர்ப்பத்தை அளித்து இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார்.
உக்ரைன் போருக்கு முடிவு:
மேலும் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை உள்ளிட்ட ஐ.நா.வின் கொளகைகளை இந்தியா மதிக்கிறது. போரினால் எப்போதும் தீர்வு கிடைப்பதில்லை. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரவியூகத்தின் மூலமே தீர்வு காண முடியும். எனவே, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'' என்று விளாடிமிர் புடினிடம் பிரதமர் மோடி நேரடியாக கேட்டுக் கொண்டார்.
இந்தியர்கள் திரும்ப அனுப்ப ஒப்புதல்:
மேலும், நன்பகத்தன்மை இல்லாத சில ஏஜென்ட்டுகள் மூலம் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து, அவர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவதாக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவாதம் அளித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
Watch | பூமியை கடந்து சென்ற இரு பெரிய கரடுமுரடான சிறுகோள் அதுக்கு ஒரு நிலா வேற! படம் பிடித்த Nasa!
ரஷ்யா வாழ் இந்தியர்கள்:
இதையடுத்து மாஸ்கோவில் ரஷ்யா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய மோடி, ''இந்தியா பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை உலக நாடுகளும் உற்று நோக்கி வருகிறது. அங்கீகரித்து வருகிறது. இந்தியா நம்பிக்கையுடன் வளர்ந்து வருகிறது. 140 கோடி இந்தியர்கள் கனவு காண்கிறார்கள், உறுதி மொழி எடுக்கிறார்கள், அதை நிறைவேற்றச் செய்கிறார்கள். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் விரக்தியில் இருந்தனர். ஆனால், இன்று நாடு முழு நம்பிக்கையுடன் இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய சொத்தே நம்பிக்கைதான். தற்போதைய இளம் இந்தியா கடைசி பந்து வரை தோல்வியை சந்திக்க விரும்பாது. தோல்வியை சந்திக்க விரும்பாதவர்களின் காலடியை வெற்றி முத்தமிடும்'' என்றார்.