வரலாற்று சிறப்பு பயணம்.. உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு..
பிரதமர் மோடி போலந்து மற்றும் உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்பான இராஜதந்திர முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை போலந்து நாட்டிற்கு அரசமுறை பயணம் செய்தார். 1979 இல் மொரார்ஜி தேசாய் அங்கு பயணம் மேற்கொண்ட நிலையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து நாட்டிற்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். மோடி தனது பயணத்தின் போது இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் துடா ஆகியோரை சந்தித்தார். போலந்தில் உள்ள இந்திய வம்சவளியினருடன் உரையாடினார்.
போலந்து பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ரயில் மூலம் இன்று உக்ரைன் சென்றுள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்த 6 வாரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கிவ் சென்றடைந்தார். இது அவரது முதல் உக்ரைன் பயணமாகும். இந்த பயணத்தின் போது, இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடிக்கு பிறகு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ..
1991 ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்ற பின்னர் அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்தியத் தலைவர் மோடி ஆவார், மேலும் இந்த பயணம் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்பான இராஜதந்திர முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
போலந்து மற்றும் உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விரைவில் திரும்புவதற்கான இந்தியாவின் நம்பிக்கையை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.
ரஷ்யாவுடன் பாரம்பரியமாக நெருக்கமான உறவு இருந்தபோதிலும், உக்ரைன் போரில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது.. மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா இணக்கமான உறவைப் பேணி வருகிறது..
எவ்வாறாயினும், மோடிக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் தொடர்பு, உலக அரங்கில் இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கை அங்கீகரிப்பதாக உள்ளது.
G7 உச்சிமாநாட்டின் போது, பிரதமர் மோடி மற்றும் ஜெலன்ஸ்கி இருவரும் இருதரப்பு விவாதத்தில் ஈடுபட்டனர், அங்கு தூதரக வழிமுறைகள் மூலம் ரஷ்யா-உக்ரைன் மோதலை தீர்ப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு இந்தியா எவ்வாறு பதிலளித்தது?
டிசம்பர் 2022 இல், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிரதமர் நரேந்திர மோடியை அணுகி அமைதியை கொண்டு வர இந்தியாவின் உதவியை நாடினார். முன்னதாக மார்ச் 2024 இல், பிரதமர் நரேந்திர மோடி ஜெலென்ஸ்கியுடன் பேசினார், பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.
45 ஆண்டுகளுக்கு பின் போலந்தில் கால் பதித்த முதல் இந்திய பிரதமர்; நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
ரஷ்யா-உக்ரைன் மோதல் பற்றிய அவர்களின் உரையாடலின் போது, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மோடி மீண்டும் வலியுறுத்தினார், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் முன்னோக்கி செல்லும் வழி என்று வாதிட்டார்.
மோதலுக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வுக்கு இந்தியாவின் ஆதரவை அவர் வலியுறுத்தினார், மேலும் இந்த இலக்கை அடைவதில் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்தார். உக்ரைனுக்கு இந்தியா அளித்து வரும் மனிதாபிமான ஆதரவிற்கு அதிபர் ஜெலென்ஸ்கி பாராட்டு தெரிவித்தார். தலைவர்கள் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அதே நேரம் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான இந்தியா முயற்சித்தது. இதன் மூலம், ரஷ்யாவின் கணிசமான எண்ணெய் வாங்குபவராக இந்தியா உருவெடுத்துள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தற்போதைய மோதலின் போது அத்தியாவசிய நிதி உதவியை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.