ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி: “ கௌரவ விருந்தினர் - இந்திய குடியரசு” ஒளிரும் புர்ஜ் கலிஃபா..

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் 'கௌரவ விருந்தினர் - இந்திய குடியரசு' என்ற வார்த்தைகளால் ஒளிர்ந்தது

PM Modi In UAE: Burj Khalifa Lights Up With "Guest Of Honor- Republic Of India" Rya

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உற்சாக வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாடு 2024 இல் கெளரவ விருந்தினராகப் பங்கேற்று, உச்சி மாநாட்டில் சிறப்பு உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் 'கௌரவ விருந்தினர் - இந்திய குடியரசு' என்ற வார்த்தைகளால் ஒளிர்ந்தது.

இதுகுறித்து தனது X வலைதளத்தில் பதிவிட்டுள்ள துபாயின் பட்டத்து இளவரசர், "இந்த ஆண்டுக்கான உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ள இந்தியக் குடியரசையும், இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். எங்களுக்கிடையேயான வலுவான உறவுகள். நாடுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக செயல்படுகின்றன.

 

இந்த உச்சி மாநாடு  சிறந்த நிர்வாக நடைமுறைகள், வெற்றிக் கதைகள் மற்றும் முன்முயற்சிகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், அரசாங்கத்தின் எதிர்காலத்தை கற்பனை செய்வதற்கும் உலகின் முன்னணி தளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த சர்வதேச நிகழ்வில் இந்தியா ஒரு சிறப்பு விருந்தினராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அதன் துணைத் தலைவர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்திக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலான சுவாமி நாராயணன் கோயிலை திறந்து வைக்க உள்ளார்.

"மோடியின் உத்தரவாதம் எப்போதும் முழுமைபெறும்".. "அஹ்லான் மோடி" - பிரதமருடைய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ!

முன்னதாக செவ்வாய்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இருதரப்பு சந்திப்பை நடத்தினர், மேலும் செவ்வாயன்று அவர்கள் முன்னிலையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன..

இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் " முதலில், உங்கள் அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு மாதங்களில் நாம் ஐந்து முறை சந்தித்தோம், இது மிகவும் அரிதானது. எனக்கும் ஏழு முறை இங்கு வரும் வாய்ப்பு கிடைத்தது ... ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேறிய விதத்தில், ஒவ்வொரு துறையிலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கூட்டு கூட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

"நீங்கள் இன்று சரித்திரம் படைத்துள்ளீர்கள்".. "அஹ்லன் மோடி".. மக்களிடையே உரையாற்ற துவங்கிய பிரதமர் மோடி!

மேலும் ஐஐடி டெல்லி-அபுதாபி வளாகத்தின் முதல் பேட்ச் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். மேலும் இரு நாட்டு மாணவர்களை ஒன்றிணைக்கும் திட்டத்தைப் பாராட்டினார். அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த 'அஹ்லான் மோடி' நிகழ்ச்சியில் அவர் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினார்.

விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹ்யான் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கி ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வது இது 7-வது முறையாகும், கடந்த 8 மாதங்களில் இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios