Asianet News TamilAsianet News Tamil

World Population: பிலிப்பைன்ஸில் பிறந்த உலகின் 800-வது கோடி குழந்தை! 600,700வது கோடி குழந்தை விவரம் தெரியுமா

உலகின் மக்கள் தொகை 800 கோடியை நேற்று(15ம்தேதி) எட்டியநிலையில், 800வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிறந்துள்ளது.

Philippines Manila Delivers the symbolic Eight Billionth Baby
Author
First Published Nov 16, 2022, 1:03 PM IST

உலகின் மக்கள் தொகை 800 கோடியை நேற்று(15ம்தேதி) எட்டியநிலையில், 800வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிறந்துள்ளது.

மணிலா அருகே உள்ள டாண்டோ எனும் கிராமத்தில் 800வது கோடி குழந்தை பிறந்தது. உலகளவில் 800வது கோடி மனிதர் என்று இந்த பெண் குழந்தை அழைக்கப்டும். 

மணிலாவில் உள்ள டாக்டர் ஜோஸ் நினைவு மருத்துமனையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.29 மணிக்கு, வின்ஸ் மாஸ்பான்சக் என்பவருக்கு இந்த 800வது கோடி குழந்தை பிறந்தது. 

 

உலகின் 800வது கோடி குழந்தை பிறந்ததையடுத்து, இதை பிலிப்பைன்ஸ் மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக அந்த குழந்தை மற்றும் தாயின் புகைப்படத்தை பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை இன்று 800 கோடியை எட்டுகிறது: சீனாவை முந்தும் இந்தியா: ஐ.நா. அறிவிப்பு

100 கோடி மக்கள் தொகையை எட்டுவதற்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் உலகம் எடுத்துக்கொண்டது. அடுத்தஆண்டு சீனாவின் மக்கள் தொகையை இந்தியா முறியடிக்கும் என்று ஐநா. தெரிவித்துள்ளது
பேஸ்புக்கில், பில்ப்பைன்ஸ் மக்கள்தொகை மற்றும் மேம்பாட்டு அமைப்பு பதிவிட்ட கருத்தில் “ டான்டோவில் பெண் குழந்தை பிறந்ததையடுத்து, உலக மக்கள்தொகை அடுத்த மைல்கல்லை எட்டியது. உலகின் 800வது கோடி குழந்தை பிறந்த இடமாக மணிலா அடையாளம் காணப்பட்டுள்ளது. குழந்தை வின்ஸை மருத்துவமனை செவிலியர்களும், மக்கள்தொகை மேம்பாட்டு ஆணையப் பிரதிநிதிகளும் வரவேற்றனர்” எனத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 800 கோடி நம்பிக்கைகள், 800 கோடி கனவுகள், 800 கோடி சாத்தியங்கள். நம்முடைய பூமி 800 கோடி மக்கள் வாழ்வதற்கான இடமாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளது

WHO தலைமை அறிவியல் வல்லுநர் பொறுப்பில் இருந்து தமிழகத்தின் செளமியா சுவாமிநாதன் ராஜினாமா

உலகின் 600வது கோடி குழந்தை குரோஷியா நாட்டில் பிறந்தது. அங்குள்ள ஜாக்ரெப் நகரில் கடந்த 1987ம் ஆண்டு ஜூலை மாதம் மதேஸ் கஸ்பர் என்ற குழந்தை பிறந்தது. இவர்தான் உலகின் 600வது குழந்தை என்று ஐ.நா.வால் அங்கீகரி்கப்பட்டுள்ளார். ரசாயன பொறியியல் வல்லுநராக இருக்கும் மதேஜ் கஸ்வர், ஜாக்ரெப்நகரில் வசிக்கிறார். 

உலகின் 700-வது கோடி குழந்தை போஸ்னியா ஹெர்ஜெக்கோவினாவில் பிறந்தது. இந்த குழந்தைக்கு தற்போது 23 வயதாகிறது. இந்த குழந்தையின் பெயர் அதான் மெவிக். அதான் மெவிக் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். 

இந்தியர்களுக்கு அடித்தது முதல் யோகம்; ஆண்டுதோறும் இங்கிலாந்து செல்ல 3000 பேருக்கு விசா; ரிஷி சுனக் ஒப்புதல்!!

2011ம் ஆண்டு,வங்கதேசத்தில் தாகாவில் 700வது கோடி குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் சதியா சுல்தானா ஓஸியி.  தற்போது 11வயதாகும் இந்த குழந்தைக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios