Paris Olympic 2024 |பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா ஒரு 'அவமானம்'! - டொனால்ட் டிரம்ப் விளாசல்!
உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26ம் தேதிமுதல் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடக்க விழா ஒரு அவமானம் என அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் விளாசியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 26ம் தேதி கோலாகல நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் அவரவர் நாட்டு கொடிகளுடன் அணிவகுப்பும் செய்தனர். தொடந்து பல வண்ண கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், பாரீஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா ஒரு "அவமானம்" என்று முத்திரை குத்தியுள்ளார். விழாவின் படைப்பாளிகள் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, அவர்கள் நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மாற்றியாதாக குற்றம்சாட்டினார்.
பெரிய தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய அமெரிக்க முன்னார் அதிபர் டொனால்ட் டிரம்ப், "நான் மிகவும் திறந்த மனதுடன் இருக்கிறேன், ஆனால் அவர்கள் செய்தது ஒரு அவமானம் என்று'' என்று கூறினார்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி.? நடந்தது என்ன.? 300 வீடுகள், பாலம் மாயம்- வெளியான ஷாக் தகவல்
ஒலிம்பிக் விழாவில், கத்தோலிக்கக் குழுக்களும் பிரெஞ்சு ஆயர்களும் நடனக் கலைஞர்கள் மற்றும் டிஜே ஆகியோர் 'கடைசி இரவு உணவை' (The Last Supper) நினைவூட்டும் விதமாக காட்சியளித்ததைக் கண்டித்ததை அடுத்து இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து X-தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அதிபர் டொனாட்டு டிரம்ப், "அவர்களின் நிகழ்ச்சி அமைப்பு ஒரு சாத்தானின் மயமாக காட்சியளித்தது. இது ஒரு அவமானம் என பதிவிட்டுள்ளார்.