உஸ்பெகிஸ்தானில் நடந்துவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப்புக்கு நேர்ந்த நிலையைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சிரித்துவிட்டார்.
உஸ்பெகிஸ்தானில் நடந்துவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப்புக்கு நேர்ந்த நிலையைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சிரித்துவிட்டார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று புறப்பட்டு சென்றுள்ளார்.
வெள்ளை இன மேட்டிமை, வெறுப்பை வளர்க்கும் வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை: ஜோ பிடன் திட்டவட்டம்

இந்த மாநாட்டின்போது, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப்பும் சந்தித்து நேற்று பேசினர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் எதிர்பாராத வகையில் அசிங்கப்பட்டார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பும் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஷெரீப் காதில் இருந்த இயர்போன் கழன்று கீழே விழுந்தது. இதை மீண்டும் எடுத்து சரியாகப் பொருத்த ஷெரீப் முயன்றார். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அருகே இருக்க உதவியாளரை அழைத்து இயர்போனை சரியாக காதில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்கிருந்து வந்த ஒருவர் இயர்போனை எடுத்து ஷெரீப்பின் காதில் பொருத்திச் சென்றார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல முயற்சி! சொந்த பாதுகாப்பாளர்கள் தாக்குதல்?
ஆனால், அவர் சென்ற அடுத்த சில வினாடிகளில் மீண்டும் ஷெரீப்பின் ஹெட்போன் கழன்று கீழே விழுந்தது. இதை மவுனமாகப் பார்த்து சிரிப்பை அடிக்கொண்டிருந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டார். அவரின் சத்தமும் மைக்கில் எதிரொலித்தது.
எதிர்பாராமல் இப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் நினைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நாற்காலியில் அமர்ந்தவாரே நெளிந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் காதில் ஹெட்போன் கழன்றுவிழுந்த சம்பவத்தை நெட்டிஸன்கள் கிண்டல் செய்தும் விமர்சித்தும் வருகிறார்கள். ஹெட்போனைக் கூட சரியாக பொருத்தத் தெரியாத ஷெரீப், இது நாட்டுக்கே அவமானம் என்று இம்ரான்கான் கட்சி விமர்சித்துள்ளது.
அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கியப் பதவி
கொரோனா வைரஸ் பரவல் முடிந்தபின் 2 ஆண்டுகளுக்குப்பின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் 8 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்க பிரதமர் மோடியும் நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார்.
