திடீர் ட்விஸ்ட்.. எங்களிடம் பெரும்பான்மை இருக்கு.. பாகிஸ்தான் பிரதமர் இவர் தான்..! எதிர்க்கட்சிகள் அறிவிப்பு..
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தான் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர். மேலும் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாகவும் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தான் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர். மேலும் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாகவும் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். மேலும் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதனால் கடந்த மாதம் 8 ஆம் தேதி நாடாளுமன்ற செயலரிடம் நம்பிக்கை தீர்மான கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் வழங்கின.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 179 உறுப்பினர்கள் கொண்டு பெரும்பான்மை பலத்துடன் இருந்த பிரதமர் இம்ரான் கான் அரசை கவிழ்க்க முடியாத நிலைமை இருந்து வந்தது.இந்நிலையில் இம்ரான்கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்.பிக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் இம்ரான் கான் பலம் 167 ஆக குறைந்தது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருப்பாராக அல்லது பதவி விலகுவாராக என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கான், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்திட வேண்டும் என்று அதிபரிடம் கோரிக்கை வைத்தார்.
எனது அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த முடிவு சரியானதே என்று அவர் பேசினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாகிஸ்தான் தயாராக வேண்டும். பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் படிக்க: imran khan pakistan : ஆட்சியை கலைச்சாலும் இம்ரான் கான்தான் பிரதமர்!: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா
இச்சூழலில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதால் , எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கயை ஏற்று அதிபர் ஆரிஃப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தான் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர். மேலும் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாகவும் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.