பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண சட்டமன்ற உறுப்பினரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான மியான் ஜாம்ஷெட் கககேல் (65) கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார், இந்நிலையில் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மியான் ஜாம்ஷெட் கடந்த மூன்று நாட்களாக வென்டிலேட்டரில் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் புதன்கிழமை காலை உயிரிழந்தார். குறிப்பாக, மியான் ஜாம்ஷெட்டின் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் அதிலிருந்து மீண்டுள்ள நிலையில், அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.  இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, நேற்று ஒரே நாளில் அங்கு 4,132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

இதுவரை அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.  இதுவரை கொரோனாவை எதிர்கொள்ள பிரத்யேக மருந்தோ, தடுப்பூசியோ இல்லை.  இதனால் ஏராளமானோர் கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில்  குடிமக்கள் கோவிட் -19 உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தானில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட தேசிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் குடிமக்கள் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும். "மக்கள் தனிப்பட்ட வகையில் கவனமாக இருக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை, சிந்து மனிதவளத்துறை அமைச்சர் குலாம் முர்தாசா பலூச், கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்தார்.

அதேபோல் பாகிஸ்தான் தலைவர் முனீர் கான் ஓராக்ஸாய், கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தார். இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண சட்டமன்ற உறுப்பினரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான மியான் ஜாம்ஷெட் கககேல் (65) கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் மியான் ஜாம்ஷெட் கடந்த மூன்று நாட்களாக வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியில் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர், கைபர் பக்துன்க்வாவில் உள்ள பி.கே -63 நவுஸ்ஷெரா பகுதியில் இருந்து மியான் ஜாம்ஷெட் 2018 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. கொரோனாவால் பாகிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்க்வா சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.