இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை போர் செயலாக கருதுவதாக கூறிய பாகிஸ்தான் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

Pakistan massing military forces on the Indian border: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வருவதால் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்வதாக அறிவித்தது. 

இது போர் செயலாக கருதப்படும் 

இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடனான பிற இருதரப்பு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சர்கள் இந்தியாவுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரதது செய்தது போர் செயலாக கருதப்படும் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

எல்லையில் வீரர்களை அதிகரித்த பாகிஸ்தான் 

பஹல்காம் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை கொடுப்போம் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் தங்கள் வீரர்களை பதுங்கு குழிகளுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

சிம்லா ஒப்பந்தம் ரத்து! அனைத்து வர்த்தகமும் நிறுத்தம்! இந்திய விமானங்கள் பறக்க தடை! பாகிஸ்தான் பதிலடி!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் கடுமையான எதிர்வினை மற்றும் பதிலடிக்குப் பிறகு, பாகிஸ்தான் வலுவான நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. பாகிஸ்தான் இராணுவம் தனது பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) பக்கத்தில் துருப்புக்களை நிறுத்தியுள்ளது. வீரர்கள் பதுங்கு குழிகளில் தங்கி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் உத்தரவு 

ராவல்பிண்டியில் தலைமையகத்தைக் கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தின் 10வது படைப்பிரிவை எச்சரிக்கையாக இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், சர்வதேச எல்லைக்கு எதிரே உள்ள, குஜ்ரன்வாலாவில் தலைமையகம் கொண்ட சியால்கோட் பிரிவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா vs பாகிஸ்தான்! ராணுவ பலம் யாருக்கு அதிகம்? முப்படையிலும் கெத்து யார்?