சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான்... இம்ரான் கான் எடுத்த அதிரடி முடிவு...!
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு பாகிஸ்தான் பணிந்தது. இதனையடுத்து மும்பை தாக்குதலில் தொடர்புடைய சயீத்தின் ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கம் உள்ளிட்ட 2 இயக்கங்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு பாகிஸ்தான் பணிந்தது. இதனையடுத்து மும்பை தாக்குதலில் தொடர்புடைய சயீத்தின் ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கம் உள்ளிட்ட 2 இயக்கங்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஃஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஃஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதை தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியது.
உலக நாடுகளின் கோரிக்கை பிரதமர் இம்ரான் கான் பணிந்தார். இந்நிலையில் ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கம் மற்றும் பலாக்-ஐ-இன்சானியட் அறக்கட்டளை ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவும் நேற்று பிறப்பிக்கப்பட்டது. இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சரகம் வெளியிட்டுள்ளது.
எனினும் பாகிஸ்தானின் இந்த செயலை ஏற்க மறுத்திருக்கும் மத்திய அரசு, பாகிஸ்தான் அரசு தாற்காலிகமாகவே இவற்றிற்கு தடை விதித்திருப்பதாக விமர்சனம் செய்துள்ளது.