பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகர் அருகே ஒரு கிராமத்தில், ஒரு சிறுமியின் சகோதரர் மற்றொரு பெண்ணை  பலாத்காரம் செய்துவிட்டார் என்பதற்காக சகோதரர் தவறுக்கு, சிறுமியை குடும்பத்தினர் முன் பலாத்காரம் செயத கொடுமை நடந்துள்ளது.

இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோல் மனிதநேயமற்ற தீர்ப்பை வழங்கிய, அந்தசெயலில் ஈடுபட்ட 25 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து முல்தான் நகர போலீஸ் அதிகாரி அஸ்ஸான் யூனுஸ் கூறியதாவது-

முல்தானின் தெற்குப் பகுதியில் ராஜ்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார். இதையடுத்து, இது உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவர்கள் ‘ஜிர்காஸ்’ எனப்படும் சட்டப்படி, அதாவது பலாத்காரத்துக்கு பழிக்குப்பழியாக பலாத்காரம் செய்வதாகும். இதனால், பலாத்காரம் செய்த அந்த இளைஞரின் 16-வயது சிறுமியை பாதிக்கப்பட்ட பெண்ணிண் குடும்பத்தில் ஒருவர் சிறுமியை அவர்களின் பெற்றோர் முன்னிலையில் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு கடந்த 17-ந்தேதி கொடுக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விஷயம் இப்போது வௌியே தெரிந்தவுடன் இரு குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்து உறுப்பினர்கள் 29 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, அதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரின் தாயும் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்த உச்ச நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள் கொடுப்பது வழக்கில் இருந்து வருகிறது. இதற்கு முன்கடந்த 2002-ல் முக்தரன் மாய் என்ற பெண்ணின் கணவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டார் என்பதற்காக, முக்தரனை கூட்டு பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முக்தரன் மாயம் 5 பேருக்கு தூக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில்  பெண் உரிமைக்கான மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரகாரராக மாறியுள்ளார்.