இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர். பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு ராணுவச் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சென்ற ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய இந்தியா, பல பதில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் தெரிவித்து வந்தனர்.

அதன்படி, மே 7ஆம் தேதி நள்ளிரவு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்தத் தாக்குதல் பற்றி முதல் அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம் நீதி நிலைநாட்டப்பட்டது, ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளது.

Scroll to load tweet…

பாகிஸ்தான் சொல்வது என்ன?

இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். கோட்லி, பஹாவல்பூரில் உள்ள அகமதுபூர் கிழக்கு, பாக், முசாபராபாத் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி கூறியிருக்கிறார்.

“அஹமதுபூர் கிழக்கில், ஒரு குழந்தையின் மரணம் மற்றும் 12 பேர் காயமடைந்தது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன... கோட்லியில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்,” என்று என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“அஹமதுபூரில் ஒரு மசூதி தாக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலுள்ள ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு விழுந்திருக்கிறது... இடிபாடுகளில் சிக்கிய பெற்றோரும் ஒரு குழந்தையும் மீட்கப்பட்டுள்ளனர்.” எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றின் அறிக்கை தெரிவிக்கிறது.

Scroll to load tweet…

ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்:

"இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்த போர் நடவடிக்கைக்கு கட்டாயமாக பதிலளிக்க பாகிஸ்தானுக்கு உரிமை உண்டு" என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்த போர்க்குணமிக்க செயலுக்கு வலுவாக பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது, மேலும் வலுவான பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முழு நாடும் பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நிற்கிறது எனவ்வும் எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது பாகிஸ்தான் படைகளுக்கும் நன்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்யின் தீய நோக்கங்கள் வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறியிருக்கிறார்.