மூளை அறுவை சிகிச்சை செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு 10 நாள் பயணமாக பாலி சென்றார் சத்குரு..
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையேயான ஆன்மீக மற்றும் கலாச்சார இழைகளை ஆராய்வதற்காக 10 நாள் பயணமாக இந்தோனேசியாவின் பாலி சென்றடைந்தார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குருவுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சத்குருவுக்கு கடுமையான தலைவலி இருந்ததாகவும், பின்னர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மார்ச் 17-ம் தேதி மண்டை ஓட்டில் ஏற்பட்ட ரத்தக்கசிவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது" என்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. இதை தொடர்ந்து அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.. மேலும், சத்குரு தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து அறுவை சிகிச்சை குறித்து வீடியோ பதிவு செய்தார். இதை தொடர்ந்து சத்குரு விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதே போல் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வந்தனர்.
இந்த சூழலில், மூளை அறுவை சிகிச்சை செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு சத்குரு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளார். நேற்று நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்தார். இதை தொடர்ந்து இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையேயான ஆன்மீக மற்றும் கலாச்சார இழைகளை ஆராய்வதற்காக 10 நாள் பயணமாக இந்தோனேசியாவின் பாலி சென்றடைந்தார். இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. சந்தியாகா யூனோ மற்றும் பாலியில் உள்ள இந்திய தூதர் டாக்டர். ஷஷாங்க் விக்ரம் உள்ளிட்டோ சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சத்குரு ஆகியோர் கம்போடியாவுக்குச் செல்வதற்கு முன் நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல உள்ளார்..
இந்தோனேசியா அமைச்சருடன் பேசிய சத்குரு, ஒடிசாவின் "பாலி ஜாத்ரா", பாலியுடனான ஒடிசா மக்களின் கடந்தகால தொடர்பை நினைவுகூரும் வருடாந்திர சமூக-கலாச்சார நிகழ்வை சுட்டிக்காட்டியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வின் போது, ஒடிசா மக்கள் தங்கள் முன்னோர்கள் பாலிக்கு மேற்கொண்ட பயணத்தின் அடையாளமாக மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வண்ண காகிதம், உலர்ந்த வாழை மரப்பட்டைகள் மற்றும் கார்க்ஸால் செய்யப்பட்ட சிறிய பொம்மை படகுகளை மிதக்கிறார்கள்.
அயோத்தி ராமர் கோயில்: அன்சாரி குடும்பத்துக்கு மோடி புகழாரம்!
சத்குரு தனது பயணத்தின் போது, கலாச்சாரங்கள் மற்றும் கோவில்களின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆராய உள்ளார். பாலியில் உள்ள பெசாகி மற்றும் தீர்தா எம்புல் கோவில்கள் உட்பட பல்வேறு புராதன ஆற்றல் இடங்களை பார்வையிட உள்ளார்.. இந்தோனேசியா மற்றும் கம்போடியாவில் சத்குரு மேற்கொண்ட ஆழமான ஆய்வு, 2023 ஆம் ஆண்டில் மட்டும் சமூக ஊடகங்களில் 4.37 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. மேலும் அவரின் வீடியோக்களை தவறாமல் பார்க்கும் பில்லியன் கணக்கானவர்களுக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.