ஒபாமா மகளுக்கு 'கிஸ்' அடித்த இளைஞர்! அதிபர்கள் மகள்கள் ஆதரவு!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மகள் மலியா, இளைஞர் ஒருவருக்கு முத்தம் கொடுதத காட்சிகள் வெளியாகி உள்ளது. மலியா ஒபாமா, இளைஞருக்கு முத்தம் கொடுத்ததற்கு ஆதரவாக அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்காவும், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சியும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மலியா ஒபாமா, கால்பந்து மைதானம் ஒன்றில் இளைஞர் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் சிகரெட்டை பிடித்ததாகவும், அமெரிக்காவின் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில் இவாங்கா டிரம்பின் டுவிட்டர் பதிவில், மலியா ஒபாமாவுக்கு அவரது பள்ளி நாட்களில் வழங்கப்பட்ட சுதந்திரம் தற்போது வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், மலியா ஒபாமா ஒரும் இளம் பெண் என்ற நிலையில், மீடியாக்கள் தங்களுக்கான வரம்பை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சி கிளிண்டன், டுவிட்டரில் மலியாவுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு இளம் பெண் - கல்லூரி மாணவி என்ற முறையில் மலியாவின் தனிப்பட்ட வாழ்க்கையை காமிரா கண்களுக்கு உட்பட்டதல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.