kim jong un:ஒரு பக்கம் சீனா மிரட்டல்; மறுபக்கம் ஜப்பான் நோக்கி வடகொரியா ஏவுகணை தாக்குதல்!!
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா ஏவுகணையை கடலுக்குள் செலுத்தியுள்ளது. இதையடுத்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜப்பானின் வடக்கு தீபகற்பமான ஹொக்கைடோ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
ஜப்பானிய அதிகாரிகள் சிறிது நேரத்தில் எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றனர். தீவின் அருகே ஏவுகணை விழும் என்று தவறாக கணித்ததாக தெரிவித்தனர். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, தனது அரசாங்கம் இதுகுறித்து தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை கூட்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமடா கூறுகையில், இந்த ஏவுகணை கிழக்கில் உயரத்தில் வானம் நோக்கி ஏவப்பட்டதாக தெரிகிறது. ஏவுகணை ஜப்பான் எல்லையில் விழவில்லை. கடலுக்குள் விழுந்துள்ளது. மேலும் ஏவுகணை ஏவப்பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
மங்கிய கண்பார்வை..நாக்கு மரத்துப்போச்சு.! ரஷ்ய அதிபர் புடினின் லேட்டஸ்ட் ஹெல்த் ரிப்போர்ட்
இந்த ஏவுகணை வடகொரியாவின் கிழக்கில் கடலுக்குள் விழுந்ததாக கடற்கரை பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜப்பான் நாட்டின் முக்கிய பொருளாதார மண்டலத்தின் வழியாக இந்த ஏவுகணை சென்றதா என்பதை அமைச்சர் ஹமடா உறுதி செய்யவில்லை. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நகர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி இந்த தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரியா புதிய வகை ஏவுகணையை சோதித்து இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையை வடகொரியா தனது ராணுவ அணிவகுப்பில் இடம் பெறச் செய்து இருந்தது என்று தெரிவித்துள்ளது. அந்த ஏவுகணை திட எரிபொருள் பயன்படுத்தி ஏவியதாக இருக்கலாம். வடகொரியா கடந்த காலங்களில் சோதித்தது திரவ எரிபொருளில், நீண்ட தூரம் ஏவக்கூடியவை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா இந்த ஆண்டு அணு ஆயுதங்களை தாங்கி நீருக்கடியில் செல்லும் ஆளில்லா விமானம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
நான் போர் குற்றவாளியா? புடின் எனது நண்பரே அல்ல! - எலான் மஸ்க் அதிரடி!
மத்திய ராணுவ ஆணையத்துடன் சந்திப்பு
முன்னதாக, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த திங்களன்று மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதன் கூட்டணி நாடான தென் கொரியாவின் அச்சுறுத்தல் ஆகியவற்றை விவாதித்தாக கூறப்பட்டது.
போருக்குத் தயாராகிறதா?
வடகொரியா கடந்த ஆண்டு தன்னை அணுசக்தி நாடாக அறிவித்து அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி, இந்த ஆண்டின் தொடக்கத்தில், உண்மையான போருக்குத் தயாராகும் வகையில் ராணுவப் பயிற்சிகளை தீவிரப்படுத்துமாறு கிம் உத்தரவிட்டுள்ளார்.