நான் போர் குற்றவாளியா? புடின் எனது நண்பரே அல்ல! - எலான் மஸ்க் அதிரடி!
ரஷ்யா உக்ரைன் போரின் போது, ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க், பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார். அது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் கூறுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தன்னை "போர் குற்றவாளி" என்று அழைத்தார், ஆகவே அவர் எனது சிறந்த நண்பரே அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக, ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவின் ஒரு ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும், எலான் மகஸ், தனது ட்வீட்டில் உக்ரைன் போர் "அது யாருக்கும் தேவையில்லை" என்றும் விரைவில் "மறைந்துவிடும்" என்று கூறினார். பயனர் ஒருவர் மஸ்க்கை குறியிட்டு, ரஷ்ய தலைவர்களை மீண்டும் ஏன் அனுமதித்தார் என்று கேட்டதற்கு, எலான் மஸ்க், "உக்ரைனுக்கு உதவியதற்காக புடின் என்னை போர்க்குற்றவாளி என்று அழைத்தார். அதனால் அவர் என்னுடைய சிறந்த நண்பரே அல்ல என பதிவிட்டார்.
டெலிகிராப் செய்தி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையில், ட்விட்டர் இனி ரஷ்ய அரசு ஊடக நிறுவனங்களின் வரம்பைக் கட்டுப்படுத்தாது என்று கூறியது. மேலும், போர் காலத்தின் போது, அதிபர் புதினின் ட்விட்டர் கணக்கு, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் அதன் இங்கிலாந்து தூதரகம் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்றும் தெரிவித்தது.
ரஷ்யா-உக்ரைன் போது, எலான் மஸ்க் போர் பற்றிய கருத்துகளை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். கடந்த, ஜனவரியில், மஸ்க் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் 20,000க்கும் அதிகமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை உக்ரைன் ராணுவத்திற்கு வழங்கியது. இதை ரஷ்ய தொலைக்காட்சி கடுமையாக விமர்சித்தது.
NATO : நேட்டோவில் இணைந்த பின்லாந்து.. ரஷ்யா என்ன செய்யப்போகுதோ.! பதறும் உலக நாடுகள்