வடகொரியாவிடம் வாலாட்டாத கொரோனா... உலக நாடுகளை அலறவிடும் கிங் ஜான் உன்..!
அமெரிக்கா போன்ற உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில் எங்கள் நாட்டில், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால், ஒருவரைக் கூட கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என வடகொரிய அதிபர் கூறியுள்ளார்.
அமெரிக்கா போன்ற உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில் எங்கள் நாட்டில், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால், ஒருவரைக் கூட கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என வடகொரிய அதிபர் கூறியுள்ளார்.
சீனாவின் பிறப்பிடமாக கொரோனா வைரஸ் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை உலக முழுவதும் 64,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11, 34000ஆக உயர்ந்துள்ளது. இதில், சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்துள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரியாவிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனிடையே, மற்றொரு கிழக்காசிய நாடும், சீனாவின் அண்டை நாடுடான வட கொரியாவில் கொரோனாவல் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் வட கொரியா, தொடர்ந்து பொய் தகவல்களை கூறி வருவதாகவும், உயிரிழந்தர்கள் விபரங்களை மறைப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வட கொரியா நாட்டின் பேரிடர் தடுப்பு துறைக்கான அதிகாரி கூறுகையில் கொரோனா வைரஸ், சீனாவில் பரவத் தொடங்கியதுமே நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக்கிவிட்டோம். மற்ற நாடுகளுடனான எல்லைகளுக்கு, 'சீல்' வைத்து விட்டோம். வெளிநாடுகளில் இருந்து, யாரும் வராதபடி, விமான, கப்பல் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக வந்தவர்களை வெளிநாடுகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வந்தோம் என்றார். ஆகையால், எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.